Thursday, September 11, 2014

On Thursday, September 11, 2014 by Unknown in ,    
உடுமலை ஒன்றியம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சியில் திங்கள்கிழமை அதிமுகவினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர் .
கண்ணமநாயக்கனூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக ஏ.சக்திவேல் போட்டியிடுகிறார். இதையொட்டி, அதிமுகவினர் அப்பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த துண்டறிக்கைகள் வீடு, வீடாக விநியோகிக்கப்பட்டன. மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.சண்முகவேலு தலைமையில் நடைபெற்ற இப்பிரசாரத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: