Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by Unknown in ,    



ஆப்கானிஸ்தானில் அதிபர் ஹமீத் கர்காயின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய அதிபராக அஷ்ரப் கனி பதவி ஏற்கிறார்.
 
ஆப்கானிஸ்தானில் அதிரபராக இருக்கும் ஹமீத் கர்காயின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து ஜனநாயக முறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிபர் தேர்தல் நடந்தது.
 
அந்தத் தேர்தலில் அஷ்ரப் கனி மற்றும் அப்துல்லா அப்துல்லா ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் அஷ்ரப் கனி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதை அப்துல்லா அப்துல்லா ஏற்கவில்லை. இதனால் தேர்தல் அதிகாரபூர்வமாக அறிவிக்க முடியாமல் இழுபறி நிலை நீடித்தது.
 
இந்நிலையில் தற்போதைய அதிபர் கர்சாய் முன்னிலையில் அவர்கள் இருவரும் இடையில் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி அஷ்ரப் கனி அதிபராகவும், அப்துல்லா அப்துல்லா பிரதமராகவும் நியமனம் செய்யப்பட்டனர்.
 
அதைத் தொடர்ந்து, புதிய அதிபராக அஷ்ரப் கனி பதவி ஏற்கிறார். இவருடன் 100 உயர் அதிகாரிகளும் பதவி ஏற்கின்றனர். பதவி ஏற்பு நிகழ்ச்சி தலைநகர் காபூலில் நடைபெறுகிறது.
 
அதிபராகப் பதவி ஏற்கும் அஷ்ரப் கனி மற்றும் அப்துல்லா அப்துல்லா இருவரும் தலிபான் எதிர்ப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: