Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
திருப்பூரில் கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் பூம்புகார்நகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 38). பிரிண்டிங் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த சுந்தரி(56) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது அருந்திய முருகன் சுந்தரியை ஆசைக்கு இணங்க அழைத்துள்ளார். இதற்கு சுந்தரி மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சுந்தரியின் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் சுந்தரி ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுந்தரி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சுந்தரி கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நெல்சன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக முருகனை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூர் 1–வது மாஜிஸ்திரேட்டு கோர்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

0 comments: