Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
நண்பரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 10 நாட்களில் விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 33). இவருடைய நண்பர்கள் அம்பத்தூர், எம்.கே.பி.நகர் பகுதியைச் சேர்ந்த குமார் (48), ஷாஜி (45). கடந்த 28-5-2011 அன்று அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் ஏரியில் மீன் பிடிப்பதற்காக நண்பர்கள் 3 பேரும் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ரமேசுக்கும், அவரது நண்பர்களான குமார், ஷாஜி ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் இருவரும் சேர்ந்து ரமேஷை தாக்கி கீழே தள்ளினார்கள். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ரமேஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
5 ஆண்டுகள் சிறை
திருமுல்லைவாயல் போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக குமார், ஷாஜி ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3-ல் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, குற்றவாளிகளான குமார், ஷாஜி ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராதம் கட்டத்தவறினால் மேலும் 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். அரசு தரப்பில் வக்கீல் அந்தமான் முருகன் ஆஜராகி வாதாடினார்.

கடந்த 1-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. சாட்சிகளிடம் உடனுக்குடன் விசாரணை செய்யப்பட்டு 10 நாட்களிலேயே கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

0 comments: