Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
முன்னாள் மத்திய மந்திரியின் மருமகன் கொலையில் கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அவர் கொடுத்த தகவலின்பேரில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை சர்மா நகரைச் சேர்ந்தவர் வக்கீல் காமராஜ்(வயது 50) முன்னாள் மத்திய மந்திரி தலித் எழில்மலையின் மருமகன். கடந்த மாதம் 28–ந்தேதி காமராஜ், தனது கட்சிக்காரர் கல்பனா(40) என்பவரின் வீட்டில் மர்மமான முறையில் அடிபட்டு கிடந்தார். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு இறந்தார்.
திரு.வி.க.நகர் போலீசார் கல்பனாவை கைது செய்தனர். இந்த வழக்கு கொரட்டூர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரக்குமார், கல்பனாவை 2 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது போலீசில் கல்பனா அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
நான் திரு.வி.க. நகரில் வாங்கிய இடம் தொடர்பான வழக்குக்காக வக்கீல் காமராசை அணுகினேன். வழக்கு விஷயமாக அவர் அடிக்கடி வீட்டுக்கு வந்து பணம் வாங்கிக்கொண்டு செல்வார். நாளடைவில் அவர் பணம் கேட்டு தொல்லை கொடுத்தார். சம்பவத்தன்று காமராஜ் வீட்டுக்கு வந்தபோதும் பணம் கேட்டு தொல்லை செய்தார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு அவரை நான் கீழே தள்ளியதில் காயம் அடைந்தார்.
அவரை கொலை செய்யும் முடிவுக்கு வந்தேன். அன்று எனது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஆனந்த், கார்த்திக் ஆகிய 2 பேரின் உதவியோடு காமராஜ் முகத்தை கைகளால் அமுக்கி மூச்சுதிணறச் செய்ததில் மயங்கிவிட்டார். எனவே அவர் இறந்துவிட்டதாக நினைத்து அவருடைய காரில் காத்திருந்த கோகிலாவிடம் காமராஜ் தவறி விழுந்து விட்டதாக கூறி நாடகமாடினேன். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் இறந்துவிட்டார்.
இவ்வாறு கல்பனா கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் கோவிலம்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த்(26), கார்த்திக்(24) ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். 2 பேரையும் போலீசார் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கல்பனாவின் வளர்ப்பு மகள் சித்ரா என்பவரை தான் ஆனந்த் திருமணம் செய்து இருக்கிறார்

0 comments: