Friday, October 31, 2014

On Friday, October 31, 2014 by Unknown in ,    
Displaying DSC_0749.JPG


                                                                 பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 107 வது குருபூஜை விழாவினை முன்னிட்டு மதுரைக்கு வருகை தந்த அகில இந்திய முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவரும் ,நடிகருமான் கருணாஸ் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் .

எத்தனை ஆண்டுகளாக தேவர் ஜெயந்தி விழாவிற்கு வருகிறீர்கள் ? முக்குலத்தோர் புலிப்படையின் நோக்கம் என்ன ?

                     2014 ம் ஆண்டோடு தொடர்ந்து 7 ஆண்டுகளாக தேவர் ஜெயந்தி விழாவிற்கு வந்து கொண்டு இருக்கிறேன் .கல்வி வளர்ச்சி பெற்ற சமூகமாக முழுமையாக மாற்றுவதே முக்குலத்தோர் புலிப்படையின் நோக்கம்  ஆகும்

தேவர் ஜெயந்தி விழாவில் 144 தடை உத்தரவு பற்றி ?
                                    144 தடை உத்தரவு அதிகமாக பயன்படுத்திட கூடிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது .ஆனால் ஒரு தேசிய தலைவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரரின் விழாவில் 144 தடை உத்தரவு போடுவது என்பது நாட்டு பற்றிற்கு போடப்படுகிற முட்டுக்கட்டை ஆகும் .எதிர்கால சந்ததிகளின் சிந்தனையை மழுங்கடிக்கிற செயல் ஆகும்

மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்டுகிற கோரிக்கை வலுத்து வருகிறதே ?

                             இது சம்பந்தமாக ஏற்கனவே 2004 ம் ஆண்டே சுப்ரமணிய சாமி மூலம் மத்திய மந்திரி ஜோஷி அவர்களிடம் வலியுறுத்தினோம் .ஆனால் அப்போது இருந்த மாநில அரசு முழுமையாக ஆதரவு அளிக்க வில்லை

107 வது தேவர் ஜெயந்தி விழாவில் முக்குலத்தோர் புலிப்படையின் சூளுரை ?

                   ஒரு பெருத்த சமுதாயம் .ஏற்கனவே 1995,2005 அரசாணையான கள்ளர் ,மறவர் ,அகமுடையார் சமுதாயத்தை தேவர் இனமாக அறிவிக்கும் அரசாணையை நடைமுறை படுத்த வேண்டும் ,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்

தென் மாவட்டங்களில் பரவலாக நடைபெறும் கௌவரவ கொலைகள் பற்றி ?

                  என்றுமே மனித உயிர்கள்  கொல்லப்படுவதை ஊக்குவிக்க முடியாது .தேவர்  திருமகனார்  1957 ல் சொன்னது போல தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின்  மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது என் இதயத்தை  பிளப்பதற்கு சமம் என்பதை நெஞ்சில் நிறுத்தி வாழ்பவர்களில் நானும் ஒருவன் .


பேட்டியின் போது முக்குலத்தோர் புலிப்படை மாவட்ட செயலாளர் முத்துமணி ,மாணவர் அணி ஜெகன் ,மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்

0 comments: