Friday, October 31, 2014

On Friday, October 31, 2014 by Unknown in ,    
Displaying NEWS 2  SELLUR RAJU 2.JPG


                            மதுரை மாவட்ட கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா மதுரையில்  நடைபெற்றது.தொழிலாளர் நலத்துறை ஆணையர் ராதாகிருஷ்ண பாண்டியன் தலைமை தாங்கினார். இணை ஆணையர் ராஜா முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் செல்லூர்ராஜூ கலந்து கொண்டு வாரிய தொழிலாளர்கள் 1594 பேருக்கு ரூ.43 லட்சம் மதிப்பிலான நிதி உதவிகளை வழங்கி பேசிய போது ,மதுரை மாவட்டத்தில் அமைப்புசாரா வாரிய உறுப்பினர்களாக 3 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். அதனை 5 லட்சமாக மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டுக்குரியது. உழைப்பவரே உயர்ந்தவர் என்ற லட்சியத்தை கொண்டது அ.தி.மு.க. இயக்கம்.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், மக்களின் முதல்வர் அம்மாவும் தொழிலாளர்களை தங்கள் வீட்டு பிள்ளைகளாக பாவித்து பல்வேறு நலத்திட்டங்களை தந்துள்ளனர். தொழிலாளியின் வியர்வை காயும் முன், ஊதியம் கொடுக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர் மக்களின் முதல்வர் அம்மா.தொழிலாளர்களின் குழந்தைகள் சமுதாயத்தில் உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், மக்களின் முதல்வர் அம்மாவும் திட்டங்களை தந்திருக்கிறார்கள்.தொழிலாளர்கள் தங்குவதற்காக சென்னையில் ஜீவா இல்லம் அமைத்தவர் எம்.ஜி.ஆர். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து தந்தவர் அம்மா. அமைப்பு சாரா நல வாரியத்தில் கட்டிட தொழிலாளர்களையும் சேர்த்து சலுகைகள் வழங்கியவர் அம்மா. கருணை உள்ளம் கொண்ட அம்மா, சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தொழிலாளிகளின் தலை எழுத்தையே மாற்றி காட்டினார்.தொழிலாளர் வர்க்கத்திற்கு வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை, சலுகைளை வாரி வழங்கியவர் அம்மா. இதை தொழிலாளர்கள் ஒரு போதும் மறக்கக்கூடாது.தொழிலாளி இறந்தால் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.1 லட்சம் என்று இருந்ததை ரூ.5 லட்சமாக உயர்த்தினார். அப்படிப்பட்ட மக்களின் முதல்வர் அம்மாவுக்கு தொழிலாளர்கள் அரணாக இருக்க வேண்டும்.சூழ்ச்சியாளர்களால் அம்மாவுக்கு சோதனை ஏற்பட்டபோது தமிழகமே கொதித்தெழுந்தது. அம்மா விடுதலை ஆக வேண்டும் என்று அவரவர் தெய்வங்களை வழிபாடு செய்தனர். மக்களின் பிரார்த்தனை பலித்தது. அதுபோல அவருக்கு எதிரான அநீதியை விரைவில் முறியடிப்பார். மீண்டும் தமிழகத்தின் நிரந்தர முதல்–அமைச்சராக வருவார். தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்களை அள்ளி தருவார்.என உரையாற்றினார் 

0 comments: