Monday, October 13, 2014
அமராவதி ஆற்றிலிருந்து கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான நீரை திறந்து விடாததால் காய்ந்து போன பயிர்களுடன் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் விசாயிகள் மனு.
அமராவதி ஆற்றின் கடைமடை பகுதியான கரூர் மாவட்டத்தில் சுமார் 50 கிலோமீட்டர் தூரம் கடந்து காவிரி ஆற்றில் கலக்கும் வகையில் உள்ள அமராவதி ஆற்று நீரை நம்பி ஆயிரக்கணக்கான பாசன ஏக்கர் நிலங்கள் உள்ளடக்கிய விவசாயிகள் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகாலமாக வறட்சியினால் அமராவதி ஆறு வறண்டது, இருந்தும் கடந்த ஆண்டும், நடப்பாண்டிலும் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர் மட்டம் சராரியாக சுமார் 80 அடி அளவு கொள்ளவு எட்டிய போதும், அமராவதி ஆற்றுநீரை நம்பியுள்ள கடமடை பகுதியான கரூர் விவசாயிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதோடு ஆற்றில் தண்ணீர் திறந்துவிடவில்லை. இதை கண்டித்து கடந்த மாதம் சின்னதாராபுரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் போரட்டம் நடத்தியதை அடுத்து இரு நாட்கள் மட்டும் தண்ணீர் திறந்து விட்டது. இதை நம்பி கரூர் விவசாயிகள் விவசாய பணிகள் மேற்கொண்டனர். தொடர்ந்து அமராவதி குறையவே பயிர்கள் கருக தொடங்கியது. தொடர்ந்து கரூர் பகுதிக்கு தேவையான தண்ணீர் திறக்க அமராவதி ஆற்று பாசன பொறியாளர்கள் புறக்கணித்து வருதாலும். திருப்பூர் மக்கள் மட்டும் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறந்து விடுவதாலும் இதனைகண்டித்து இன்று கரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 700 க்கும் மேற்பட்டடோர் ஒன்று திரண்டு காய்ந்து போன பயிர்களோடு மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். இது குறித்து கரூர் மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாய சங்க செயலாளர் ராமலிங்கம் கூறும் போது, திருப்பூர் மாவட்ட அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி கரூர் விவசாயிகளுக்கு தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். இதனால் 11 பழைய ஆயகட்டு கால்வாய்களை சார்ந்த விவசாயிகள் இன்று தற்கொலை செய்யும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே எங்களுக்கு உரிய நீரை வழங்காவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஸ்குவாஷ் அணியினருடன் பயிற்சியாளர் சைரஸ் போஞ்சா, ஸ்காட்லாந்துக்கு செல்லாததால் வீரர், வீராங்கனைகள் ...
-
திருச்சி 11.12.15 திருச்சி உங்களுடன் அமைப்பு சார்பாக இன்று ஊர்காவல் படை ரோட்டரி இன்னர்வீல் லயன்எக்ஸ்னோரா தமிழ்நாடு வியாபாரிகள் சங...
-
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தூத்து...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
-
சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வுளமான மண் இருந்தால் தான் நிலையான ம...
0 comments:
Post a Comment