Monday, October 13, 2014

On Monday, October 13, 2014 by farook press in ,    
விசாகப்பட்டினம் அருகே புயல் கரையை கடந்தபோது, மெரினா கடற்கரையிலும் கடல் சீற்றம் காரணமாக ராட்சத அலைகள் எழுந்தது. இதனால் மெரினா வெறிச்சோடி காணப்பட்டது.
வங்க கடலில் நிலை கொண்ட ஹூட் ஹூட் புயல் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு இடையே மையம் கொண்டிருந்தது. இந்தப்புயல் நேற்று பகல் விசாகப்பட்டினம் அருகே பலத்த காற்றுடன் கரையை கடந்தது.
இதனையொட்டி தமிழக மீனவர்கள் அப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
நேற்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும், ஆந்திராவில் புயல் கரையை கடக்க உள்ளது என்ற தகவல் காரணமாக நேற்று பகல் பொழுதில் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது.
காலை வேளையில் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்பட்டது.
மெரினா கடற்கரையில் உள்ள சர்வீஸ் சாலையில் பகல் நேரங்களில் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால் சாலை முழுவதும் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது. போலீசார் மட்டும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நேப்பியர் பாலம் அருகில் உள்ள இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தளபதி அலுவலகத்திலும் கடற்படை வீரர்களும், மீட்பு படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
கடற்சீற்றம் காரணமாக ராட்சத அலைகளும் எழுந்ததால், கடற்கரைக்கு வந்த ஒரு சில இளைஞர்கள் செல்போன் மூலம் ராட்சத அலைகளை படம் எடுக்க முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, கடலில் தண்ணீர் இருக்கும் பகுதிக்கு உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. வழக்கமாக பகல் பொழுதில் மெரினா கடற்கரையில் அதிகம் காணப்படும் காதல் ஜோடிகளையும் காணமுடியவில்லை. புயல் கரையை கடந்துவிட்டது என்று அறிவிப்பு வந்த உடன் பொதுமக்கள் வழக்கம் போல் மெரினா கடற்கரையில் குளித்து ஆரவாரம் செய்தனர்.

0 comments: