Thursday, October 09, 2014

On Thursday, October 09, 2014 by Unknown in ,    
Displaying NEWS 1 SETHU ENGG COLLEGE.JPGமதுரை அருகே சேது பொறியியல் கல்லூரியில் 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் ப்ளஸ்1, ப்ளஸ்2 மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி மற் றும் பிராஜெக்ட் போட்டிகள் அக்டோபர் 9,10 தேதிகளில் நடைபெற்றது .இதில் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மா ணவிகளுக்கு கணித தலைப் பில் கணித விளையாட்டு, அறிவியலில் இன்றைய அறிவியல் என்ற தலைப்பில் பிராஜெக்ட்கள் இடம்பெற்றன ,மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி ,விருதுநகர் முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் ,கல்லூரி முதன்மை அலுவலர்கள் சீனி முகைதீன் ,சீனி முகம்மது ,முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் கல்லூரி தலைவர் முகமது ஜலீல் தலைமையேற்று தொடங்கி வைத்தார் .மூன்று பரிசுகள் வீதம் ரூ.8 ஆயிரம், ரூ.6 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது ,ப்ளஸ்1, ப்ளஸ்2 மாணவர்களுக்கு கணித தலைப்பில் கணிதத்தின் வியக்கத்தக்க பண்புகள், இயற்கையில் கணிதம், இயற்பியல் தலைப்பில் மனிதனும் இயந்திரமும், இயற்பியலின் ஆச்சரியங்கள், வேதியியல் தலைப்பில் தினசரி வாழ்வில் வேதியியல், திட்ட உணவும் வேதியிலும், கணினியியல் தலைப்பில் கலந்துரையாடும் இணைய தள உருவாக்கம், அன்றாட வாழ்வில் கணினி ஆகிய தலைப்புகளில் பிராஜெக்ட்கள் இடம்பெற்றன வ்வொரு தலைப்பிற்கும் 3 பரிசுகள் வீதம் வெற்றி பெற்ற குழுவிற்கு ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரத்து 500, ரூ.2 ஆயிரத்து 500 வீதம் வழங்கப்பட்டது .கல்லூரியை சார்ந்த கணித பேராசிரியர் முனைவர் லெட்சுமணன் ,கணேசன் ,லட்சுமி நாராயணன்,மீனாட்சி சுந்தரம் ,குரு பாஸ்கர் ,ஹரி குமார் ,மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்

0 comments: