Wednesday, October 01, 2014

On Wednesday, October 01, 2014 by farook press in ,    
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து மடத்துக்குளம்,கொழுமம்,குமரலிங்கம் பகுதிகளில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து மடத்துக்குளம் பகுதியில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனிகோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை கண்டித்தும், அந்த தீர்ப்பை ரத்து செய்ய கோரியும் அ.தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி மடத்துக்குளம் அருகே உள்ள கொழுமம் பஸ் நிலையம் அருகே மடத்துக்குளம் ஒன்றிய கழக செயலாளர் மெட்ராத்தி நா.அண்ணாத்துரை தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. பேராட்டத்தில் பேரூராட்சி செயலாளர் கே.பி.ரவி, மடத்துக்குளம் பேரூர் துணை செயலாளர் எஸ்.ராஜ்குமார், சங்கராமநல்லூர் பேரூராட்சி தலைவர் ராமுத்தாய், கொழுமம் ஊராட்சி கழக செயலாளர் துரைராஜ், வீரமணி, முத்துராமலிங்கம், மைதீன்பாட்சா, சுப்பிரமணி, வடிவேலு, ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடத்தூரில் ஊராட்சி மன்ற தலைவர் கே.என்.ராசு தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் திருப்பூர் மாவட்ட அரசு வக்கீல் கே.ராமகிருஷ்ணன், கே.கே.பன்னீர் செல்வம், ராஜ்குமார், சிவலிங்கம், கணியூர் பேரூராட்சி தலைவர் தேவி, துணைத் தலைவர் காஜாமைதீன், முத்துசாமி, சிராஜூதீன், முருகேசன், கணேசமூர்த்தி, மணி, நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குமரலிங்கத்தில் பேரூர் செயலாளர் கே.ஏ.வரதராஜன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் கே.ஆர்.சிவக்குமார், துணைத்தலைவர் எம்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் குமரலிங்கம் வாய்க்கால் பாசன தலைவர் ராமசாமி, கவுன்சிலர்கள் மற்றும் அ.திமு.க.வினர் உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதே போல் துங்காவில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

0 comments: