Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்கர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்கர் ஊட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:–
நீலகிரி மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகளுடன் கட்சி வளர்ச்சி குறித்து கூடலூரில் ஆலோசனை நடத்தினேன். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்து உள்ளோம்.
சிறுபான்மையினத்தை சேர்ந்த இஸ்லாமிய மக்களுக்கு கட்டாய திருமண சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டந்தோறும் இஸ்லாமிய பள்ளி வாசல்களில் உள்ள காஜிகளுக்கு திருமண பதிவுக்கான அதிகாரம் அளிக்க வேண்டும். அப்போது தான் இஸ்லாமியர் கலாசாரத்தை பாதுகாக்க முடியும்நாடு முழுவதும் பலகோடி ரூபாய் மதிப்பு உள்ள வக்பு வாரிய சொத்துக்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த சொத்துக்களை மீட்க கடந்த 2013–ம் ஆண்டு பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சீர் திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டம் நிறைவேறியதால் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ, சென்னை என்ற 5 மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, வக்புவாரிய சொத்துக்களை விரைவாக மீட்கப்பட உள்ளன. தமிழகத்தில் ஊட்டியில் தான் வக்பு வாரிய சொத்துக்கள் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதை மீட்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.



0 comments: