Showing posts with label Nilgiris. Show all posts
Showing posts with label Nilgiris. Show all posts

Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்கர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்கர் ஊட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:–
நீலகிரி மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகளுடன் கட்சி வளர்ச்சி குறித்து கூடலூரில் ஆலோசனை நடத்தினேன். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்து உள்ளோம்.
சிறுபான்மையினத்தை சேர்ந்த இஸ்லாமிய மக்களுக்கு கட்டாய திருமண சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டந்தோறும் இஸ்லாமிய பள்ளி வாசல்களில் உள்ள காஜிகளுக்கு திருமண பதிவுக்கான அதிகாரம் அளிக்க வேண்டும். அப்போது தான் இஸ்லாமியர் கலாசாரத்தை பாதுகாக்க முடியும்நாடு முழுவதும் பலகோடி ரூபாய் மதிப்பு உள்ள வக்பு வாரிய சொத்துக்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த சொத்துக்களை மீட்க கடந்த 2013–ம் ஆண்டு பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சீர் திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டம் நிறைவேறியதால் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ, சென்னை என்ற 5 மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, வக்புவாரிய சொத்துக்களை விரைவாக மீட்கப்பட உள்ளன. தமிழகத்தில் ஊட்டியில் தான் வக்பு வாரிய சொத்துக்கள் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதை மீட்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.



On Saturday, October 04, 2014 by farook press in ,    
காந்தி ஜெயந்தி தினத் தன்று மது விற்றதாக நீலகிரி மாவட்டத்தில் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத் தில் மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட வேண்டும் என்று கலெக்டர் சங்கர் உத்தர விட்டு இருந்தார்.
இதன்படி மதுக்கடைகள் மற்றும் பார் கள் மூடப்பட்டு இருந்தன. இருப்பினும் ஊட்டி, குன் னூர், கோத்தகிரி, குந்தா, கூட லூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீ சாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து, மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சம்பத்குமார் உத்தரவின்பேரில் மதுவிலக்கு போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று காந்தி ஜெயந்தி தினத் தன்று விற்பனை செய்ததாக 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து மதுவிலக்கு போலீசார் கூறியதாவது:- நீலகிரி மாவட் டத்தில் காந்தி ஜெயந்தி தினத் தன்று மது விற்றதாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கூடலூரில் முஸ்தபா என்பவரிடம் இருந்து 33 மது பாட்டில்கள் உள்பட மொத் தம் 150 மது பாட்டில்களை பறிமுதல் செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
On Saturday, October 04, 2014 by farook press in ,    
ஜெயலலிதாவை விடு தலை செய்யக்கோரி பந்தலூர், உப்பட்டியில் கடையடைப்பு போராட் டமும்,கூடலூரில் கூட்டு பிரார்த்தனையும் நடை பெற்றது
அ.தி.மு.க. பொதுச்செயலா ளர் ஜெயலலிதாவை விடு தலை செய்யக்கோரி பந்தலூர், உப்பட்டியில் நேற்று கடைய டைப்பு போராட்டம் நடை பெற்றது. இதனால் அனைத்து கடைகளும் காலை முதல் மாலை வரை அடைக்கப்பட் டன. ஆனால் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்பட்டன. இதேபோல் பந்தலூர் வியா பாரிகள் சங்கம் சார்பில் உண் ணாவிரத போராட்டம் நடை பெற்றது.
இதில் வியாபாரிகள் முன் னேற்ற நல சங்க தலைவர்அசரப் தலைமை தாங்கினார். செய லாளர் ராமானுஜம், பொருளா ளர் கிருஷ்ணகுமார், உப்பட்டி வியாபாரிகள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்புசாமி, வக் கீல் ஜெயசீலன் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்ட னர்
நெலாக்கோட்டையில் அ. தி.மு.க. சார்பில் உண்ணா விரத போராட்டம் நடைபெற் றது.போராட்டத்திற்கு பந்தலூர் ஒன்றிய செயலாளர் அபு தலைமை தாங்கி னார். இதில், ஊராட்சி மன்ற தலைவர் பிரேமலதா, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் இந்திராணி, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் பவுலோஸ்குட்டி, வக்கீல்கள் பொன் ஜெயசீலன், பேபி, உஸ்மான் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார் கள்.
முன்னதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெய லலிதாவை விடுதலை செய்யக் கோரி அ.தி. மு.க. தொண்டர் கள் சிலர் மொட்டை யடித்துக் கொண்டனர். பின்னர் மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் நிறைவு பெற்றது.
ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி கூடலூரி¢ல் அனைத்து மத பிரதிநிதிகளின் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், நெலாக் கோட்டை மசூதி இமாம் உஸ் மான் தாரினி, முத்து மாரியம் மன் கோவில் அர்ச்சகர் கதிரே சன், கிறிஸ்தவ ஆலய போதகர் ஜெயராஜ் ஆகியோர் பிரார்த் தனை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அ.தி. மு.க. மாவட்ட செயலாளரும், தாட்கோ தலைவருமான கலைச்செல்வன், ஆவின் வாரிய இணைய தலைவர் அ.மில்லர், அவை தலைவர் தேனாடு லட்சுமணன் உள்பட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு மனித சங்கிலி போராட்டம் ஆவின் வாரிய இணைய தலைவர் மில்லர் தலைமையில் நடை பெற்றது.

இதில் இளைஞரணி மாவட்ட செயலாளர் அனூப், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் ராணி, நகர செயலாளர் ராஜா தங்கவேல், ஒன்றிய செயலாளர் பத்ம நாபன் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
கூடலூர் அருகே அரசு பஸ்களை காட்டு யானை கள் வழிமறித்ததால் பய ணிகள் பீதி அடைந்த னர். பின்னர் 1½ மணி நேரத்துக்கு பிறகு காட்டு யானைகள் அங்கிருந்து சென்றன.

காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானைகள் செல்லும் வழித்தடங்கள் மறிக்கப்பட்டு மின்வேலிகள், கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், வனப்பகுதியில் விலங்குகளுக்கு உணவு தட்டுப் பாடு நிலவுவதால் குடியிருப்பு கள், விவசாய நிலங்களை நோக்கி காட்டு யானைகள் படையெடுத்து வருகின்றன.இதனால் பொருட்சேதமும், உயிரிழப்பு சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வரு கின்றன.

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட கிளன் வன்ஸ் பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக குட்டியுடன் கூடிய 3 காட்டு யானைகள் நடமாடி வருகின்றன. இதனால் பொதுமக்கள், தோட்ட தொழி லாளர்கள் மத்தியில் பீதி நிலவி வந்தது.

அரசு பஸ்களை வழிமறித்தது

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 8¼ மணிக்கு கூட லூரில் இருந்து பெரியசோலை, மூலக்காடு பகுதிக்கு பயணிக ளுடன் அரசு பஸ்கள் புறப் பட்டு சென்றது. அப்போது கிளன்வன்ஸ் பகுதியில் செல் லும் சாலையில் குட்டியுடன் 3 காட்டு யானைகள் நின்றன. மேலும் அரசு பஸ்களை வழி மறித்தது. இதனால் பஸ்சில் அமர்ந்திருந்த பயணிகள், போக்குவரத்து கழக ஊழியர் கள் மத்தியில் பீதி ஏற்பட் டது.

இதையடுத்து, பஸ் டிரைவர் கள் தங்கள் பஸ்சில் இருந்த ஓலிப்பான்களை அடித்தனர். ஆனால் காட்டு யானைகள் அதை பொருட்படுத்தாமல் பஸ்களை நோக்கி வந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர்கள அரசு பஸ்களை சற்று தூரம் பின்னோக்கி ஓட்டி சென்றனர்.இதனை தொடர்ந்து சுமார் 1½ மணி நேரம் கழித்து அருகே இருந்த தோட்டத்துக் குள் காட்டு யானைகள் புகுந் தன. அதன்பிறகு அரசு பஸ்கள் அங்கிருந்து புறப்பட்டு சென் றது. இது குறித்து தகவல் அறிந்த ஓவேலி வனத்துறை யினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் நேற்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். இந்த யானை களை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
On Saturday, September 20, 2014 by farook press in ,    
ஊட்டி, 

ஒருங்கிணைந்த தோட் டக்கலை இயக்கத்தின் கீழ் பல்வேறு மானிய திட்டங்களை செயல் படுத்த ரூ.8½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் சங்கர் தெரிவித்து உள் ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தோட்டக்கலை துறை

நீலகிரி மாவட்டத்தில்தோட் டக்கலை துறையின் மூலமாக ஒருங்கிணைந்த தோட்டக் கலை இயக்க திட்டத்தின் கீழ் மலர் சாகுபடியினைஊக்குவித் தல், இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல், வாசனை திர விய பயிர் சாகுபடியினை ஊக் குவித்தல், மனிதவள மேம்பாடு போன்ற பல்வேறு திட்டங்க ளுக்கு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின் றன. நடப்பு நிதியாண்டு 2014- 15-ல் ஒருங்கிணைந்த தோட் டக்கலை இயக்கத்தின் கீழ் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்த ரூ.8 கோடியே 45 லட்சத்து 27 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உள் ளது.

பசுமை குடில்

இதன்படி உயர் தொழில் நுட்ப பசுமை குடில் அமைக்க ஒரு விவசாயிக்கு 4 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு வரை, சதுர மீட்டருக்கு ரூ.422 முதல் 467 ரூபாய் 50 காசுவரை மானியமாக வழங்க திட்ட மிடப்பட்டு 31 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பிற்கு மானியம் வழங்க ஒருங்கிணைந்த தோட் டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 41 லட்சத்து 30 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது.

மலர் சாகுபடி செய்யும் விவ சாயிகளுக்கு நடவு பொருள் மானியமாக ஒரு விவசாயிக்கு 4 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பு வரை 50 சதவீதம் மானியமாக ரூ.305 வீதம் 30 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பிற்கு ரூ.91 லட் சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது.

வாசனை திரவிய பயிர்கள்

நாற்றுகள் தயாரிப்பினை ஊக்குவிக்க நிழல்வலை கூடா ரம் அமைக்க 50 சதவீத மானியமாக சதுர மீட்டருக்கு ரூ.355 வீதம் வழங்க 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பிற்கு ரூ.7 லட் சத்து 10 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது. இதேபோல் கூடலூர், குன்னூர், கோத்தகிரி, தாலுகாவில் வாசனை திரவிய பயிர்களான இஞ்சி, குறுமிளகு பயிர்களை சாகுபடியினை ஊக்குவிக்க நடவு பொருள் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை மேலாண்மை மேற்கொள்ள தேவைப்படும் செல வினங்களுக்காக 40 சதவீதம் மானியம் வழங்கப் படுகிறது.

இஞ்சி பயிர் சாகுபடி செய்ய ஒரு ஹெக்டர் பரப்பிற்கு ரூ.12 ஆயிரம் வீதம் 100 ஹெக்டர் பரப்பிற்கு ரூ.12 லட்சமும், குறுமிளகு பயிருக்கு ஒருஹெக்டருக்கு ரூ.20 ஆயிரம்வீதம் 200 ஹெக்டர் பரப்பிற்கு 40 லட்சமும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது.

பண்ணை இயந்திர கருவிகள்

பண்ணை எந்திர கருவி கள் பயன்பாட்டினை ஊக்கு விக்க ரூ.8 லட்சத்து 29 ஆயிரம் நிதி ஒதுக்கீடும், மனித வள மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.2 லட்சத்து 26 ஆயிரம் நிதி ஒதுக்கீடும் பெறப் பட்டு உள் ளது. மனித வள மேம்பாட்டு திட்டத் தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி, மாநில அளவிலான பயிற்சி, வெளி மாநில அளவிலான பயிற்சிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. அறுவடை பின் செய்நேர்த்தி தொழில் நுட்பத்தினை கடை பிடிக்க ரூ.21 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடுபெறப்பட்டு உள்ளது.

இத்திட்டங்களில் பயன்பெற வட்டார தோட்டக்கலைஉதவி இயக்குனரிடம் நில உரிமை ஆவணம், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங் களுடன் நேரில் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
உள்ளாட்சி இடைத்தேர் தலை முன்னிட்டு 4 நாட்கள் மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் சங் கர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மதுபானங்களை விற்கக்கூடாது
நீலகிரி மாவட்டத்தில் கீழ்குந்தா பேரூராட்சி மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங் களில் வருகிற 18–ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறு கிறது. இதனால் இன்று (செவ் வாய்க்கிழமை) மாலை 5 மணி முதல் 18–ந் தேதி மாலை 5 மணி வரையும், வாக்கு எண் ணிக்கை நடைபெறும் 22–ந் தேதியும் கீழ்குந்தா பேரூராட்சி வார்டு எண் 1 மற்றும் 7, கூடலூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 3–க்குட்பட்ட பகுதிகளில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது.
மேலும், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003–ன் படி மஞ்சூர் பஜார், அய்யங்கொல்லி, உப்பட்டி மற்றும் சேரம்பாடி பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட்டு இருக்கும் என பொதுமக்களுக்கு தெரிவிக் கப்படுகிறது.
கடும் நடவடிக்கை
மேற்குறிப்பிட்ட தினங்களில் எந்தவித மதுபானங்களும் விற் பனை செய்யக் கூடாது. அன் றைய தினங்களில் கட்டாயமாக டாஸ்மாக் மது பான சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்படு கிறது. இந்த உத்தரவை மீறி மது பானங்கள் விற்பனை செய்யும் கடை பணியாளர்கள் மீது கடு மையான நடவடிக்கை எடுக் கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
விலையில்லா மடிக் கணினி வழங்கக் கோரி கூடலூரில் கல்லூரியின் நுழைவு வாயிலில் 3-ம் ஆண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற் பட்டது.

மாணவர்கள் போராட்டம்

கூடலூர் கோழிப்பாலம் பாரதியார் பல்கலைக் கழக கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11 மணிக்கு திடீரென கல்லூரி நுழைவு வாயிலில் திரண்டு நின்று போராட்டம் நடத்தினர். இது பற்றி மாணவர்கள் கூறியதாவது:-

எங்கள் கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு இதுவரை விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட வில்லை. மேலும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக கல்வி உதவி தொகையும் வழங்கவில்லை. இதனால் நாங்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றோம்.

கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். கல்லூரி மாணவர்கள் சென்று வர போதிய பஸ் வசதி அமைத்து தர வேண்டும் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பேச்சுவார்த்தை

இது பற்றி தகவல் அறிந்ததும் கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோபி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கல்லூரி முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) லி.ரமேஷ் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவர்களின் முக்கிய பிரச்சினையான பஸ் வசதி குறித்து கல்லூரி முதல்வர், தாசில்தார், போக்குவரத்து அலுவலர் ஆகியோர் கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும். மீதமுள்ள கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என மாணவர்களிடம் உறுதி அளிக்கப்பட்டது. இதில் சமரசம் அடைந்த மாணவர்கள் நுழைவு வாயில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
குன்னூரில் நடுரோட்டில் மலைரெயில் நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

4 சாலைகள் சந்திப்பு

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு மலை ரெயில் தினந்தோறும் சென்று வருகிறது. குன்னூரில் மலை ரெயில் பாதை போக்குவரத்து நெருக்கடி நிறைந்த பகுதியில் உள்ளது. குன்னூர் -மேட்டுப் பாளையம் சாலை, குன்னூர்- ஊட்டி சாலை, மவுண்ட் ரோடு செல் லும் சாலை, ஓட்டுப்பட்டறை செல்லும் சாலை ஆகிய 4 சாலைகள் சந்திக்கும் இடத்தில் ரெயில் பாதை அமைந்து உள்ளது.

உள்ளூர் பஸ் நிலையம், மார்க் கெட், மவுண்ட் ரோடு ஆகிய பகுதிகளுக்கு இந்த ரெயில் பாதை தண்ட வாளத்தை தாண்டி தான் செல்ல வேண்டும்.

இந்த நிலையில் நேற்று சுமார் காலை 10.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூரை நோக்கி மலை ரெயில் வந்து கொண்டு இருந் தது.ரெயில் வருவதற்காக ரெயில்வே கேட் ஏற்கனவே மூடப்பட்டு இருந்தது.

ரெயில்வே கேட் அருகே வந்த போது திடீரென்று என்ஜினால் பெட்டிகளை தள்ளி செல்ல முடிய வில்லை. தண்டவாளத்தில் என்ஜினின் சக்கரங்கள் வழுக்கியதால் சக்கரங்கள் மட்டுமே சுற்றியது.ஆனால் பெட்டிகள் நகர வில்லை. உடனடியாக அந்த இடத்தில் மலை ரெயில் நிறுத்தப் பட்டது. மலை ரெயில் நடுரோட்டில் நின்ற தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட் டது.

மேலும் தண்ட வாளத்தில் மணல் மற்றும் சாம்பல் போடப்பட்டது. இதனை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து மலை ரெயில் குன்னூர் ரெயில் நிலையத்தை நோக்கி புறப்பட்டு சென்றது.

இதன் காரணமாக ரெயில்வே கேட்டின் இரு புற மும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக் குள்ளாகினர். ரெயில்வே கேட் திறக்கப்பட்ட பின்னர் போலீசார் மிகுந்த சிரமத்து டன் வாகன போக்குவரத்தை சீரமைத்தனர்.

நடைபாதை மேம்பாலம்

மலை ரெயில் செல்லும் நேரங்களில் ரெயில்வே கேட் மூடப்படும் போது பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. ரெயில்வே கேட் மூடப்படும் போது பொது மக்கள் சிறிய கேட்டினுள் நுழைந்து தண்ட வாளத்தை கடந்து செல்வது பெரும் சிரம மாக உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகபொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
கொலக்கம்பையில் இருந்து மேட்டுப் பாளையத்திற்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள் ளனர்.

கொலக்கம்பை கிராமம்

கொலக்கம்பை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி களில் 50-க்கும் மேற்பட்டகிரா மங்கள் உள்ளன. இந்த கிராமங் களில் 20 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் வசித்து வருகிறார் கள். மேலும் கொலக்கம்பை கிராமத்தில் அரசு ஆஸ்பத்திரி, பள்ளிகள், வங்கிகள், தபால் நிலையம், போலீஸ் நிலையம் உள்ளிட்ட அரசின் முக்கிய அலுவலகங்கள் இயங்கி வரு கின்றன.

இதனால் இப்பகுதி மக்க ளின் நலனை கருத்தில்கொண்டு குன்னூர் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கொலக்கம்பையில் இருந்து ஊட்டி, மேட்டுப் பாளையம், திருப்பூர், உள் ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பஸ் இயக்க கோரிக்கை

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டுப் பாளையத்தில் இருந்துகொலக் கம்பை வரை இயக்கப்பட்ட அரசு பஸ் திருப்பூர் வரை செல்ல வழித்தடம் நீட்டிக்கப் பட்டது. பின்னர் அதன் பயண நேரமும் மாற்றப்பட் டது. இதனால் பள்ளி முடிந்து வீடு திரும்பும் பள்ளி மாணவ- மாணவிகள், கூலி தொழிலா ளர்கள் பல மணி நேரம் பஸ் நிலையத்தில் காத்து கிடக்க வேண்டிய அவல நிலை ஏற் பட்டு உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதி காரிகள் பள்ளி மாணவர்களின் நலன் கருதி கொலக்கம்பையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by Unknown in ,    

 



நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை பெய்து வருவதால் 2வது நாளாக இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Thursday, July 24, 2014

On Thursday, July 24, 2014 by Anonymous in    
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வால்பாறையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்கிறது. இதன் காரணமாக வால்பாறையில் உள்ள கல்லூரி மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை மீறிச் செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் கூறியிருப்பதாக வால்பாறை வட்டாட்சியர் என்.நேரு தெரிவித்தார்.