Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
விலையில்லா மடிக் கணினி வழங்கக் கோரி கூடலூரில் கல்லூரியின் நுழைவு வாயிலில் 3-ம் ஆண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற் பட்டது.

மாணவர்கள் போராட்டம்

கூடலூர் கோழிப்பாலம் பாரதியார் பல்கலைக் கழக கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11 மணிக்கு திடீரென கல்லூரி நுழைவு வாயிலில் திரண்டு நின்று போராட்டம் நடத்தினர். இது பற்றி மாணவர்கள் கூறியதாவது:-

எங்கள் கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு இதுவரை விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட வில்லை. மேலும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக கல்வி உதவி தொகையும் வழங்கவில்லை. இதனால் நாங்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றோம்.

கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். கல்லூரி மாணவர்கள் சென்று வர போதிய பஸ் வசதி அமைத்து தர வேண்டும் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பேச்சுவார்த்தை

இது பற்றி தகவல் அறிந்ததும் கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோபி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கல்லூரி முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) லி.ரமேஷ் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவர்களின் முக்கிய பிரச்சினையான பஸ் வசதி குறித்து கல்லூரி முதல்வர், தாசில்தார், போக்குவரத்து அலுவலர் ஆகியோர் கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும். மீதமுள்ள கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என மாணவர்களிடம் உறுதி அளிக்கப்பட்டது. இதில் சமரசம் அடைந்த மாணவர்கள் நுழைவு வாயில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

0 comments: