Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
குன்னூரில் நடுரோட்டில் மலைரெயில் நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

4 சாலைகள் சந்திப்பு

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு மலை ரெயில் தினந்தோறும் சென்று வருகிறது. குன்னூரில் மலை ரெயில் பாதை போக்குவரத்து நெருக்கடி நிறைந்த பகுதியில் உள்ளது. குன்னூர் -மேட்டுப் பாளையம் சாலை, குன்னூர்- ஊட்டி சாலை, மவுண்ட் ரோடு செல் லும் சாலை, ஓட்டுப்பட்டறை செல்லும் சாலை ஆகிய 4 சாலைகள் சந்திக்கும் இடத்தில் ரெயில் பாதை அமைந்து உள்ளது.

உள்ளூர் பஸ் நிலையம், மார்க் கெட், மவுண்ட் ரோடு ஆகிய பகுதிகளுக்கு இந்த ரெயில் பாதை தண்ட வாளத்தை தாண்டி தான் செல்ல வேண்டும்.

இந்த நிலையில் நேற்று சுமார் காலை 10.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூரை நோக்கி மலை ரெயில் வந்து கொண்டு இருந் தது.ரெயில் வருவதற்காக ரெயில்வே கேட் ஏற்கனவே மூடப்பட்டு இருந்தது.

ரெயில்வே கேட் அருகே வந்த போது திடீரென்று என்ஜினால் பெட்டிகளை தள்ளி செல்ல முடிய வில்லை. தண்டவாளத்தில் என்ஜினின் சக்கரங்கள் வழுக்கியதால் சக்கரங்கள் மட்டுமே சுற்றியது.ஆனால் பெட்டிகள் நகர வில்லை. உடனடியாக அந்த இடத்தில் மலை ரெயில் நிறுத்தப் பட்டது. மலை ரெயில் நடுரோட்டில் நின்ற தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட் டது.

மேலும் தண்ட வாளத்தில் மணல் மற்றும் சாம்பல் போடப்பட்டது. இதனை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து மலை ரெயில் குன்னூர் ரெயில் நிலையத்தை நோக்கி புறப்பட்டு சென்றது.

இதன் காரணமாக ரெயில்வே கேட்டின் இரு புற மும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக் குள்ளாகினர். ரெயில்வே கேட் திறக்கப்பட்ட பின்னர் போலீசார் மிகுந்த சிரமத்து டன் வாகன போக்குவரத்தை சீரமைத்தனர்.

நடைபாதை மேம்பாலம்

மலை ரெயில் செல்லும் நேரங்களில் ரெயில்வே கேட் மூடப்படும் போது பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. ரெயில்வே கேட் மூடப்படும் போது பொது மக்கள் சிறிய கேட்டினுள் நுழைந்து தண்ட வாளத்தை கடந்து செல்வது பெரும் சிரம மாக உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகபொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: