Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
ஜெயலலிதா விரைவில் விடுதலை செய்யக்கோரி கையில் மெழுகுவர்த்தி ஏந்தி
 சர்வசமய பிரார்த்தனை நடந்தது. தீர்ப்புக்கு எதிர்ப்பு 
.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூர் தனிக்கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தண்டனை, தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவையிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று கோவை எஸ்.என்.ஆர்.கல்லூரி கலையரங்கில் சர்வ சமய பிரார்த்தனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், மேயருமான கணபதி ராஜ் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இந்து மதம் சார்பில் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், கிறிஸ்தவ மதம் சார்பில் பாதிரியார் அசோக்குமார் (டி.இ.எல்.சி), முஸ்லிம் மதம் சார்பில் ராம்நகர் ஜமாத் தலைமை இமாம் முகமது பாரூக் பாகவி ஆகியோர் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர்.முன்னதாக மேயர் கணபதி ராஜ்குமார் பேசும்போது தாயை இழந்த குழந்தை போல்
அ.தி.மு.க.பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட கொடூரமான தீர்ப்புக்கு தமிழக மக்கள் தொடர்ந்து தங்களின் எதிர்ப்பை காட்டிவருகின்றனர். பொதுவாக பல்சமய பிரார்த்தனையில் மிகுந்த பலன் உண்டு. இந்த வகையில் சதிகாரர்களால் புனையப்பட்ட பொய்வழக்கால் சிறைக்கு சென்றுள்ள கழக பொதுக்செயலாளரை விடுதலை செய்யக்கோரி இந்த கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. இதில் சாதி, இன, சமய வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபட்டு மனம் உருகி பிராத்தனை செய்வோம். இந்த பிரார்த்தனையில் மிகுந்த வலிமை உண்டு. இந்த பிரார்த்தனையால் தாயை இழந்த குழந்தை போன்று தவிக்கும் தமிழகத்துக்கு விடிவு ஏற்படும் என்று நம்புவோம். மீண்டும் அவர் முதல்–அமைச்சராக வந்து தமிழக மக்களின் கண்ணீரை துடைப்பார். அதற்காக நாம் கையில் தீபங்கள் ஏந்தி கடவுளிடம் மனம் உருக பிரார்த்திப்போம்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் தா.மலரவன், வி.சி.ஆறுக்குட்டி, மண்டல தலைவர்கள் கே.ஆர்.ஜெயராமன், ஆதிநாராயணன், சாவித்திரி பார்த்தீபன், பெருமாள்சாமி, குழுத்தலைவர்கள் அம்மன் அர்ஜூனன், பிரபாகரன், சாந்தாமணி, வக்கீல் ராஜேந்திரன், செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.ராஜூ, அண்ணா தொழிற்சங்க தலைவர் நா.கருப்புசாமி, சி.டி.சி.கருணாகரன், முன்னாள் எம்.பி யு.ஆர்.கிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் பீளமேடு துரை, சிங்கை ரங்கநாதன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைகளில் மெழுகு வர்த்தி தீபம் ஏந்தி மவுன பிரார்த்தனை செய்தனர்.
இதுபோல் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி கோவை மாவட்ட தக்னி சுன்னத் ஐக்கிய ஜமாத் சார்பில் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஹைதர் அலி திப்புசுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனை நடந்தது. நிகழ்ச்சிக்கு ஏ.அகமத் பாஷா தலைமை தாங்கினார். இதில் செயலாளர் கலிமுதீன், அப்துல் ரஷீத், நசீர் ஷரீப், அன்வர் பாஷா, ஷேக்பாபு, அப்துல் ஜப்பார், முகமது ஷரீப், அப்துல் மன்னார் சையத்குத்தூஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இதுபோல் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி செல்வபுரம் வியாபாரிகள் சங்கம் சார்பில் அந்த பகுதியில் கடைஅடைப்பு போராட்டம் நடத்தினர். இதையொட்டி நேற்று செட்டிவீதி முதல் ஆண்டிபாளையம் வரை, செல்வபுரம் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் செல்வபுரத்தின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த கண்டன கூட்டத்தில், சங்க தலைவர் கருப்பையா, செயலாளர் சிவசேகர், பொருளாளர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் மெடிக்கல் நாராயணன், லட்சுமிசேகர், துணைதலைவர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 இதுபோல் கோவை தியாகி குமரன் மார்க்கெட் காய், கனி சிறுவியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு மார்க்கெட் சபூர் பாய் தலைமை தாங்கினார். முத்தலி, உமர்அலி, முஸ்தபா, கிருஷ்ணன், சங்கர், சுக்கூர்பாய், கரீம், விசாலாட்சி, யூசுப், ஷாஜகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 இதுபோல் கோவை உக்கடம் லாரிப்பேட்டை முகமதுஅலி பழைய இரும்பு மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடந்தது.

0 comments: