Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையை இடித்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்து உள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் யானைகள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி குடியி ருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. தற்போது யானைகளின் இடப்பெயர்ச்சி காலம் தொடங்கி உள்ளதால், அவை கோவை வழியாக கர்நாடக வனப்பகுதிக்கு சென்று வருகின்றன.
அவ்வாறு செல்லும் போது காட்டு யானைகள் அருகே உள்ள குடியிருப்புகளில் நுழைந்து விடுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமலை வனப்பகுதியில் இருந்து 12 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் யானைமடுவு பகுதிக்குள் நுழைந்தன. பின்னர் அந்த யானைகள் அங்கிருந்த வாழைத்தோட்டங் களில் புகுந்து வாழைகளை தின்றும், மிதித்தும் நாசம் செய்தன. இதை அறிந்த பொதுமக்கள் தீவிர முயற்சி செய்து யானைகளை காட்டுக்குள் விரட்ட முயன்றனர்.
ஆனால் அவை வனத்திற்குள் செல்லாமல் அங்கிருந்து தாளியூர் வழியாக தீனம்பாளையம் பகுதிக்கு சென்றன. பின்னர் தீனம்பாளையம் மெயின் ரோட்டில் சிறிதுநேரம் நின்று கொண்டு இருந்தனர். பின்னர் அங்கிருந்த ஒரு ரேஷன் கடையின் கதவை காட்டுயானைகள் உடைத்து உள்ளே புகுந்தன. பின்னர் ரேஷன் கடையில் இருந்த அரிசியை யானைகள் தின்று தீர்த்தன.

இதை அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து யானைகளை விரட்ட முயன்றனர். மேலும் வனத் துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பட்டாசுகள் வெடித்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் காட்டுயானைகள் நின்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: