Monday, October 27, 2014

On Monday, October 27, 2014 by farook press in ,    
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் அமராவதி ஆற்றில் கலக்கும் போது காட்டாற்று வெள்ளம் உருவாகும் அபாயம் உள்ளது.
இது குறித்து உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாசியர் (ஆர்.டி.ஓ) சாதனைக்குறள், தாசில்தார்கள் சைபுதீன் (உடுமலை), சண்முகவடிவேல் (மடத்துக்குளம்) ஆகியோர் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் அமராவதி ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறித்தி உள்ளனர். மேலும் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கால்நடைகளை குளிப்பாட்டவோ, ஆற்றில் இறங்க வேண்டாம் என்று பொதுமக்களை எச்சரித்தும் உள்ளனர்.
இந்த நிலையில் அமராவதி அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அமராவதி அணையின் நீர் மட்ட உயரம் 90 அடியாகும். மொத்த கொள்ளளவு 4 ஆயிரத்து 47 மில்லியன் கன அடியாகும். நேற்று காலை நிலவரப்பட்டி நீர் மட்ட உயரம் 82.67 அடியாக உயர்ந்து. அணைக்கு வினாடிக்கு 1532 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 258 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 3 ஆயிரத்து 400.25 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

திருமூர்த்தி அணையின் மொத்த உயரம் 60 அடி. மொத்த கொள்ளளவு 1935 மில்லியன் கன அடியாகும். அணையின் நேற்றைய நீர் மட்ட உயரம் 39.73 அடியாகும். அணைக்கு காண்டூர் கால்வாய் மூலம் வினாடிக்கு 836 கனஅடி தண்ணீரும், பாலாறு மூலம் வினாடிக்கு 10 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. அணையில் 1114 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1185 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அணைப்பகுதியில் 7 மில்லி மீட்டர் மழையும், நல்லாறு பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும் பெய்து உள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள பொள்ளாச்சி ரோட்டில் நேற்று மாலையில் பெய்த கன மழையால் கடை வீதியில் வெள்ளம்போல் தண்ணீர் ஓடியது. 



0 comments: