Monday, October 27, 2014
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 2,448 ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நேற்று நடந்தது.இதில் புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், பல்வேறு பள்ளிகளில் நடந்த முகாம்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டது. அதனைதொடர்ந்து, பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகின்ற நவம்பர் 10ம் தேதிவரை, வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணி நடைபெறும். பெயர் சேர்க்க படிவம் 6ம், பெயர் நீக்கம் செய்ய படிவம் 7ம், விவரங்களை திருத்தம் செய்ய படிவம் 8ம், பட்டியல் பதிவை இடமாற்றம் செய்ய படிவம் 8ஏ ஆகிய படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஊராட்சி சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் வழங்கப்பட்ட பிறந்த தேதி சான்று அல்லது பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழ் நகல்கள் அல்லது பெற்றோரின் உறுதிமொழி சான்றுகளை, படிவம் 6 வுடன் இணைத்து, பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வருகின்ற 2015 ஜனவரி 1ம் தேதி அன்று, 18 வயது பூர்த்தியடைபவர்கள் புதிதாக பெயர் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம். தொழிலாளர்கள் நலன் கருதி, விடுமுறை நாளான நேற்று, மாவட்டம் முழுவதுமும் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை நடந்த இந்த முகாமில், இளைஞர்களும், பொதுமக்களும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம், படிவம் பெற்று, பூர்த்தி செய்து வழங்கினர். குறிப்பாக, புதிதாக பெயர் சேர்ப்பதற்காக, விண்ணப்ப படிவம் 6, அதிக அளவில் பெற்று பூர்த்தி செய்து வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், வரும் நவம்பர் 2ம் தேதியும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, நவம்பர் 10 வரை, அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் படிவங்கள் பெறப்படும்.
இந்த படிவங்களை பரிசீலானை செய்து 2015 ஜனவரி 5ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, புதிதாக பெயர் சேர்க்கும் வாக்காளர்களுக்கு, ஜன., 25 முதல் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் குமார்நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, பல்லடம் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வஞ்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, காமநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமினை ஆய்வு செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இயற்கை என்றால் நம் நினைவுக்கு வருவது எல்லாம் பசுமையான மரங்கள், வயல்வெளிகள், நீளமான வானமும் தான். ஆனால் இயற்கையின் மற்றொரு உருவான மலைகளும...
-
க.பரமத்தி அருகே விசுவநாதபுரி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்83 மனுக்கள் பெறப்பட்டது க.பரமத்த...
-
சென்னை: தமிழகத்தில் 21 சுங்கச் சாவடிகளில், 10 முதல், 15 சதவீத கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் மத்திய மற்றும் மாந...
-
திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம் திருச்சிராப்பள்ளி வனச்சரகம் கண்ணனூர் பிரிவுக்கு உட்பட்ட வீரமச்சான்பட்டி காப்புகாட்டில் - துறையூர் கண்...
-
திருப்பூர் அருகே, செட்டிபாளையம் பகுதியில் வீடு புகுந்து மர்ம நபர்கள் தாக்கியதில் திமுக பிரமுகர், அவரது மனைவி, மகன் கொலை செய்யப்ப...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
-
திருச்சி கழக அமைப்புச் செயலாளரும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளருமான சாருபாலா தொண்டைமான் தொகுதிக்குட்பட்ட, சோமரசம்பேட்டை முஹம்மத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment