Wednesday, October 15, 2014

On Wednesday, October 15, 2014 by Unknown in ,    
ரயில்வே சுரங்க பாதையில் தேங்கும் மழை நீர்: வாகன ஓட்டிகள் அவதி
திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடியில் கல்லுப்பட்டி மற்றும் காரியாபட்டி செல்லும் நெடுஞ்சாலைகள் உள்ளது. இந்த சாலைகள் மதுரை – தூத்துக்குடி மற்றும் மதுரை – கன்னியாகுமரி – கொல்லம் செல்லும் தேசிய சாலைகளை இணைக்கும் சாலையாக உள்ளது.
இதில் காரியாபட்டி செல்லும் சாலையில் ரெயில்வே கேட் இருந்தது. அதிக வாகனங்கள் சென்றதால் ரயில்வே கேட்டை அகற்றி விட்டு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. மழை பெய்யும் போது மழைநீர் தேங்காமல் இருக்க பக்கவாட்டில் துளை அமைக்கப்பட்டு அதன் வழியே மழைநீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. சரியான பராமரிப்பு இல்லாமல் மண் தேங்கி துளையை அடைத்துவிட்டது.
தற்போது கடந்த சில தினங்களாக மழை பெய்து முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. அதில் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது. பள்ளம் இருப்பதை தெரிந்தவர்கள் ஓரமாக செல்கின்றனர். தண்ணீர் சற்று அதிகமாக இருக்கும் போது வாகனங்களின் புகை போக்கி வழியாக தண்ணீர் சென்று விடுகிறது. இதனால் வாகனம் ஓடாமல் நின்றுவிடுகிறது.
அப்போது இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் வாகனத்தை விட்டு இறங்கி தள்ளி செல்கின்றனர். சிலர் தண்ணீரீல் விழுந்து விடுகின்றனர். இந்த நிலையை போக்க ரெயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதையின் கீழ் உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

0 comments: