Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    


திருப்பூர்,அக்.4-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,வழக்கறிஞர் பிரிவு சார்பில் கோர்ட் வீதியில் அணி செயலாளர் கே.என்.சுப்பிரமணியம், தலைவர் ஏ.ஆர்.வெளியங்கிரி ஆகியோர் தலைமையில் வழக்கறிஞர்களின் சேமநல நிதியை ரூ.5 1/4 லட்சமாக உயர்த்தி கொடுத்து திருப்பூர் மாவட்டத்திற்கு முதல்வராக இருந்த காலத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கவும், கூடுதல் சார்பு நீதிமான்றம் ஏற்படுத்தி கொடுத்தும், மாவட்ட நீதிபதியை நியமனம் செய்த மக்கள் முதலவர் ஜெயலலிதா  வழக்குகளில் இருந்து  மீண்டு வரவும், ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்தும் அமைதியான முறையில் அறவழியிலும், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிகளில்  மேயர் அ.விசாலாட்சி,துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், தங்கமுத்து, ராஜேஷ்கண்ணா, பூலுவபட்டி எம்.பாலு,ஹரிஹரசுதன், பட்டுலிங்கம் .ரத்தினகுமார், வி.எம்.கோகுல், பி.லோகநாதன், கே.பி.சண்முகம், சிவா, நீதிராஜன் ஆகியோர்களும்,
வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் ரூபன், சத்தியநாராயணன், சதீஷ்,முருகேஷ்,வேலுசாமி, பரிமளா, தங்கவேல்,மணிகண்டன்,யோகேஷ், ஷிலாதேவி, சித்ரா, கண்ணன்,சையத் இப்ராகிம், திவ்யா, ஜோதிமணி,நடராஜ், உதயகுமார், ராமமூர்த்தி,பூபதி, தங்கமணி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: