Saturday, October 18, 2014

On Saturday, October 18, 2014 by farook press in ,    
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–இலங்கை அகதி 
ஊஞ்சலூர் அருகே ஈஞ்சம்பள்ளியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இதில் வசித்து வந்தவர் இலங்கேஸ்வரன் (வயது 49). அவருடைய மனைவி ராமலட்சுமி (45). இவர்களுக்கு இந்துமதி (25), துர்கா (22) ஆகிய 2 மகள்களும், ஜெகதீஸ்வரன் (16), வெங்கடேஸ்வரன் (14) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் கடந்த 2010–ம் ஆண்டு இலங்கையில் இருந்து இங்கு வந்து தங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் திடீரென இலங்கேஸ்வரன் யாரிடமும் சொல்லாமல் அகதிகள் முகாமை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் அரசு பதிவேட்டில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டது. பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அகதிகள் முகாமுக்கு திரும்பி வந்தார். அப்போது தனது பெயரை மீண்டும் அரசு பதிவேட்டில் சேர்த்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினார்.
இதற்கிடையில் இலங்கேஸ்வரன் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த இலங்கேஸ்வரன் நேற்று மாலை அகதிகள் முகாமில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அக்கம்பக்கத்தினர் மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இலங்கேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

0 comments: