Wednesday, October 08, 2014

On Wednesday, October 08, 2014 by farook press in ,    
ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய ஆக்கியில் இடம் பெற்ற வீரரை முதல்–மந்திரி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
ஆசிய விளையாட்டு போட்டி தென்கொரியாவில் நடைபெற்றது. இதில் இந்திய ஆக்கி அணி வெற்றி பெற்றது. இந்த ஆக்கி அணியின் கோல் கீப்பராக கொச்சி பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த ஸ்ரீஜேஷ் (29) பணியாற்றினார்.
இதையடுத்து கேரள முதல்– மந்திரி உம்மன்சாண்டி, ஸ்ரீஜேஷ் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அவருடன், பென்னிபெகன் எம்.எல்.ஏ., உடன் இருந்தார்.
இது குறித்து முதல்–மந்திரி உம்மன்சாண்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்திய ஆக்கி அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீஜேஷின் பங்கு இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து உள்ளது. அவரை கேரள மக்கள் சார்பாக பாராட்டுகிறேன். இவரை போன்ற சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு கேரள அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். கேரள மாநில விளையாட்டு வீரர்களுக்கு இவர் முன் உதாரணமாக இருந்து வருகிறார். இவர், கேரள மாநில ஆக்கி அணி வீரர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: