Thursday, November 13, 2014

On Thursday, November 13, 2014 by Unknown in ,    
தமிழக மீனவர்களை மீட்க பிரதமர் உறுதியான நடவடிக்கை: ராஜீவ்பிரதாப் ரூடி தகவல்
மத்திய மந்திரியும், தமிழக பா.ஜனதா கட்சியின் மேலிட பார்வையாளருமான ராஜீவ்பிரதாப் ரூடி நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். 

விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 5 தமிழக மீனவர்களை மீட்க பிரதமர் மோடி உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறார். அதுபோல் இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்க மத்திய அரசு இலங்கையில் உள்ள தூதரகத்தின் மூலம் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. படகுகளுடன் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள். 

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: