Thursday, November 13, 2014

On Thursday, November 13, 2014 by Unknown in    
நீர்வரத்து அதிகரித்ததால் வீராணம் ஏரியில் அதிகளவு தண்ணீர் திறப்பு
கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் தொடர்ந்து 15 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வந்தது. இதனால் ஏரி–குளங்கள் நிரம்பின. மேலும் சென்னைக்கு குடிநீர் அனுப்பக்கூடிய வீராணம் ஏரியும் நிரம்பியது. ஏரியின் மொத்த கொள்ளளவான 47.5 அடியில் 45.5 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. இடையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் வங்ககடலில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாகி உள்ளதால் கடலூர் டெல்டா மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 139 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து வெள்ள அபாயத்தை தடுக்க வீராணம் ஏரியில் நீர்மட்டத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது.
மொத்த கொள்ளளவான 47.5 அடியில் 44.40 அடி தண்ணீர் மட்டும் தேக்கி வைத்து கொண்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை குடிநீருக்கு 74 கன அடி தண்ணீரும் வி.எம்.எஸ். மதகு மூலம் 555 கன அடி தண்ணீரும் மொத்தம் வினாடிக்கு 629 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

0 comments: