Thursday, November 13, 2014

On Thursday, November 13, 2014 by Unknown in ,    
மேலூரில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்
மதுரை மாவட்டடம் மேலூர் பஸ் நிலையம் அருகே அரசு உதவி பெறும் ஒரு தனியார் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நாயக்கர் தெருவை சேர்ந்த ஒரு மாணவி 6–ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய தாய் இறந்து விட்டதால் திருமணமான அக்கா பிரியாவின் பராமரிப்பில் இருந்து பள்ளிக்கு சென்று வருகிறார்.
சம்பவத்தன்று வழக்கம் போல் பள்ளிக்கூடத்திற்கு சென்றவர் திடீரென பாதியிலேயே வீடு திரும்பினார். தன்னை ஆங்கில பாட ஆசிரியர் பாண்டி என்பவர் பாலியல் தொல்லை செய்ததாக தனது அக்காவிடம் கூறினார்.
இந்நிலையில் நேற்று அந்த மாணவியின் வீடு வழியாக ஆசிரியர் பாண்டி சென்றார். அப்போது மாணவியின் அக்கா திடீரென ஆவேசமடைந்து ஆசிரியரை தாக்கினார். அப்போது அருகில் இருந்தவர்களும் ஆசிரியரை தாக்க திரண்டதால் அருகில் இருந்த சிலர் ஆசிரியரை மீட்டு ஒரு வீட்டில் அமர வைத்தனர்.
இது குறித்து மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வீட்டுக்குள் இருந்த ஆசிரியரை வெளியே அழைத்து வந்தனர்
இந்த சம்பவம் சுமார் 2 மணி நேரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மாணவியின் அக்கா பிரியா மேலூர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆசிரியர் பாண்டியை கைது செய்தார்.

0 comments: