Wednesday, November 05, 2014

On Wednesday, November 05, 2014 by Unknown in ,    

கரூர் 80 அடி சாலையில் போலீஸ் அறிவிப்பை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் அவதி  -            காவல் துறை அறிவிப்பை மீறி, 80 அடி சாலையில் நிறுத்திவைக்கப்படும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். கரூர்- கோவை சாலை அருகே 80 அடி சாலை உள் ளது. டெக்ஸ்டைல்ஸ் மற்றும் தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளான செங்குந்தபுரம், ராமகிருஷ்ணபுரம் பகுதிகளுக்கு வேன்கள் லாரிகள் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றன. இச்சாலையில் வாகனப்பெருக்கம் காரணமாக அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது., லாரிகள் மினிலாரிகள், வேன்களை இந்த சாலையில் நிறுத்திவைத்துவிட்டு பின் னர் ஓட்டுநர்கள் எடுத்து செல்கின்றனர். இதனால் வழக்கமாக சாலையில் செல் லும் கார்கள், இருசக்கர வாகனங்கள் நெரிசலில் சிக்கிக்கொள்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 80அடிசாலையில் வாகங்களை நிறுத்தி வைக்கக்கூடாது என போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர். இதுபற்றிய அறி விப்பு பலகையும் இச்சாலை யில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கின்றன., ஆனால் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டும் அறிவிப்பையும் மீறி வாகனங்கள் தொடர்ந்து இந்த சாலையில் பார்க்கிங் செய்யப்படுகின்றன.

 சனிக்கிழமை டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களுக்கு வாகனங்கள் போக்குவரத்து அதிகமாக உள்ளது. சனிக்கிழமை இந்த சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. எனவே காவல் துறை உயர்அதிகாரிகள் இப்பிரச்னையில் தலையிட்டு வாகனங்களை நிறுத்தாதவாறு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். வாகனம் நிறுத்துவதற்கு தனி இடம் ஒதுக்கி அறிவித்து அந்த இடத்தில் வாகங்களை நிறுத்தி வைக்க அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.             

0 comments: