Monday, November 17, 2014

On Monday, November 17, 2014 by Unknown in ,    
Displaying NEWS 1.JPG தமிழக முதல்வராக மீண்டும்  அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வர வேண்டும் என மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவிலில் நகர் மாவட்ட அதிமுக சார்பில் காலை 7.45 மணி முதல் 12.30 மணி வரை மகா யாகம் நடைபெற்றது .ஜெயதுர்கை அம்மனுக்கு 108 சுமங்கலிகள் கலந்து கொள்ளும் பூஜை நடைபெற்றது .108 பசுக்கள் ,கன்றுகள் ,யானை ,குதிரை ஆகியவை கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன .ஜெயலலிதாவின் மக நட்சத்திரம் தொடங்குவதையொட்டி இந்த யாகம் நடைபெற்றதாக கூறப்படுகிறது .நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜு,மேயர் ராஜன்செல்லப்பா ,எம் பி கோபாலகிருஷ்ணன் ,துணை மேயர் திரவியம் ,எம் எல் ஏ சுந்தர்ராஜன் ,வழக்கறிஞர் ரமேஷ் .நிலையூர் முருகன் மாமன்ற உறுப்பினர்கள் பூமி பாலகன் ,விஜயராகவன் மற்றும் அமைச்சரின் துணைவியார் ஜெயந்தி செல்லூர் ராஜு உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்

அம்மா சென்டிமென்ட் ல் அசத்திய அய்யர் 

                                யாகத்தின் போது பேசிய கோவில் அய்யர் ,சுந்தரராஜ பெருமான்   இந்த கோவிலில் இருந்து தான் பட்டம் சூடி ஆள சென்றது போல் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவும் மீண்டும் முதல்வராக ஆளுவார் என அம்மா சென்டிமென்ட் ல் அசத்தினார் .பூஜையில் பங்கேற்ற சுமங்கலி பெண்களுக்கு தேங்காய் ,பழம் ,தாலி யோடு 100 ரூபாயும் வழங்கப்பட்டது .

மாட்டிற்கு அபராதத்தை குறையுங்கள் 

                          யாகத்தின் போது அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் சிலர் அமைச்சரிடம் ,தெருவில் சுற்றும் மாடுகளை பிடித்து கன்று குட்டிகளாக இருந்தால் கூட 4000 ரூபாய் வரை அபராதம் விதிக்கின்றனர் .இதனை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர் .அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்

0 comments: