Monday, November 17, 2014

On Monday, November 17, 2014 by Unknown in ,    
 Displaying NEWS 1 KRISHNASAAMI.JPG
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி,தென் மாவட்டங்களில் 3 மாதங்களில் 66 கொலைகள் நடைபெற்று உள்ளதாகவும் இந்த கொலைகள் எல்லாமே ஆதிக்க சக்தி மற்றும் அரசியல் சூழ்ச்சியின் காரணமாக கூலிப்படைகளின் மூலம் நடைபெற்ற கொலைகளே ஆகும் .கௌரவ கொலைகளும் கூலிப்படை மூலமே நிகழ்த்தப்படுகிறது .இத்தகைய அசாராதண சூழ்நிலையை சமாளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்திடாமல் தமிழக அரசு  வேடிக்கை  பார்க்கின்றது
எனவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தகுதி இல்லாத அதிமுக  ஆட்சிஇனியும் நீடிக்க கூடாது  என்பதை வலியுறுத்தி மாநில ஆளுநரிடம் அதிமுக அரசை கலைத்திட வலியுறுத்தி மனு அளிக்க உள்ளதாகவும் ,வருகிற 22 ம் தேதி நெல்லையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு மாநாடு நடத்தி கவுரவ கொலைகளுக்கு எதிராக கருத்தினை பதிவு செய்ய உள்ளதாகவும் கூறினார் .சாதி ரீதியாக தொடர்ந்து பேசி வரும் ராமதாஸ் மட்டுமல்லாது யார் யாரெல்லாம் நடைபெற்ற கொலைகளின் பின்புலத்தில் உள்ளனர் என்பதை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கண்டறிய வேண்டும் .அத்தகைய சிறப்பு புலனாய்வு குழு அமைத்திட நீதிமன்றத்தை அணுக உள்ளதாக தெரிவித்தார்

0 comments: