Wednesday, November 12, 2014

On Wednesday, November 12, 2014 by Unknown in ,    


சமீபத்தில் உசிலம்பட்டியில் விமலா என்ற இளம்பெண் வேற்று சமூகத்தைச் சேர்ந்த திலிப் என்பவரை காதலித்ததால் அவரிடமிருந்து பிரித்து செல்லப்பட்டு அவரது பெற்றோர், உறவினர்களால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவத்தை அடுத்து காதலன் திலீப் காவல்துறையில் புகார் தந்ததையடுத்து, காவல்துறையினர் விமலாவின் பெற்றோரை கைது செய்தனர். கவுரவ கொலைகளை தடுத்து நிறுத்தக் கோரி, மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தின்போது இந்த சம்பவத்தில் இன்னும் பலர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக உசிலம்பட்டி காவல்துறை அதிகாரிகள் மற்றும் சில அரசியல்வாதிகளும் ஒரு தலைபட்சமாக செயல்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேசினர்.தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெறும் கவுரவ கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசப்பட்டது.உசிலம்பட்டி கவுரவக்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கொளத்தூர் மணி ,தருமபுரி இளவரசனின் மரணமே அரசியல் சக்திகளின் தூண்டுதலால் நடந்தது .இது போன்ற கவுரவ கொலைகள் நடைபெற கூடாது .சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் திருமண விவகார தலையீடு தடுப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் ,தமிழகம் முழுவதும் பணியாற்றிடும் ஆதிக்க சாதியை சேர்ந்த காவல் துறை அதிகாரிகளை உடனடியாக பணிமாற்றம் செய்ய வேண்டும் .தனக்கும் கௌவர கொலைக்கும் சம்பந்தம் இல்லை என உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் இதுவரை அறிக்கை அளிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்

0 comments: