Saturday, November 01, 2014

On Saturday, November 01, 2014 by Unknown in ,    
 
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மதுரை மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
  மேலூர் பகுதியில் பெய்த கனமழையின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கான தமிழக அரசின் நிவாரண உதவித் தொகையை, ஆட்சியர் எல். சுப்பிரமணியன் மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
  கொட்டாம்பட்டி அருகே உள்ள மணப்பச்சேரியைச் சேர்ந்த விவசாயி ராசுவுக்கு சொந்தமான வண்டிமாடு மின்னல் பாய்ந்து இறந்தது. இதற்கு, ரூ. 20 ஆயிரத்துக்கான காசோலையை ஆட்சியர் ராசுவிடம் வழங்கினார். மேலும், சாத்தமங்கலத்தில் ஆறுமுகம், இடையவலசில் ஆரம்மாள் ஆகியோரது கூரை வீடுகள் சேதமடைந்ததற்கு தலா ரூ. 2,500-க்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.
 இந்த நிகழ்ச்சியின்போது, கிரானைட் முறைகேடு தொடர்பாக முன்னாள் ஆட்சியர் சகாயம் விசாரணை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, தமிழக அரசு அனுமதி கிடைத்ததும் விசாரணை தொடங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
  நிகழ்ச்சியில், மேலூர் வட்டாட்சியர் எஸ். மணிமாறன் மற்றும் துணை வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

0 comments: