Wednesday, November 12, 2014

On Wednesday, November 12, 2014 by Unknown in ,    
கிரானைட் முறைகேடு வழக்கு: பி.ஆர்.பழனிச்சாமி குடும்பத்தினருடன் மேலூர் கோர்ட்டில் ஆஜர்மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் கற்களை சட்ட விரோதமாக வெட்டி எடுத்ததில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. மேலூர், நாவினிப்பட்டி, கீழையூர் ஆகிய பகுதிகளில் பட்டா இல்லாத இடத்தில் அரசு அனுமதியின்றி கிரானைட் வெட்டியது தொடர்பாக இதுவரை 53 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு இன்று மாஜிஸ்திரேட்டு மகேந்திர பூபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் தொடர்புடைய பி.ஆர்.பி.கிரானைட் அதிபர் பழனிச்சாமி, அவரது மனைவி செல்வி மற்றும் உறவினர்கள் சந்திரலேகா, சிவரஞ்சனி, செந்தில்குமார், சுரேஷ்குமார், தெய்வேந்திரன், முருகன் ஆகிய 8 பேர் மாஜிஸ்திரேட்டு மகேந்திர பூபதி முன்பு ஆஜர் ஆனார்கள்.
வழக்கை விசாரித்த அவர், அடுத்த மாதம் 17–ந்தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்

0 comments: