Friday, November 21, 2014

On Friday, November 21, 2014 by Unknown in ,    
சுயமரியாதை திருமணங்கள் கொடி கட்டி பறக்கின்றன: மு.க.ஸ்டாலின் பேச்சு
மதுரை மாநகராட்சி முன்னாள் மேயரும், மாநில தி.மு.க. தணிக்கைக்குழு உறுப்பினருமான குழந்தை வேலு–தனலட்சுமி ஆகியோரது மகன் செந்தில் முருகனுக்கும், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜன்–வசந்தி ஆகியோரது மகள் தேன்மொழிக்கும் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இன்று திருமணம் நடந்தது.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:–
இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள் நடக்கும் போது முன்பெல்லாம் ஆச்சரியப்படுவதும், கேலி–கிண்டல் செய்வதும் உண்டு. விமர்சனங்கள் வருவதும் உண்டு. ஆனால் இன்று ஆச்சரியப்படுவது கிடையாது.
வைதீகமுறைப்படி திருமணம் நடந்தால்தான் அதைப்பார்த்து, ஆச்சரியப்படும் நிலை உள்ளது. இதுபோன்ற சீர்திருத்த திருமணங்களுக்கு காரணம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர்தான்.
இவர்களால் தான் சீர்திருத்த திருமணங்கள் நாட்டில் கொடிகட்டிப்பறக்கின்றன.
இந்த திருமணம், அழகு தமிழ்மொழியில் நடந்த திருமணமாகும். தாய் மொழிக்கு கலைஞர் பெற்றுத்தந்த செம்மொழியால் நடைபெற்ற திருமணமாகும்.
நானும், குழந்தைவேலுவும் மேயராக இருந்தபோது அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் நடைபெற்ற மேயர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசி இருக்கிறோம். அப்போது தி.மு.க.வின் எண்ணங்கள், கலைஞரின் கொள்கைகள் பற்றி பேசவாய்ப்பு கிடைத்தது.
சென்னை மேயராக இருந்தபோது, நான் செய்த சாதனைகள், திட்டங்கள், நிறைவேற்றப்பட்ட பணிகள் பற்றியெல்லாம் இங்கு எடுத்து கூறினார்கள். குழந்தைவேலு மேயராக இருந்தபோது, மதுரையில் சுற்றுவட்டச்சாலை, மேம்பாலங்கள், பாதாள சாக்கடை இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் அவர் காலத்தில் நிறைவேற்றப்பட்டன.
இப்போது நடைபெறும் ஆட்சியில், இதுபோன்ற பொதுப்பணிகள் நடைபெற்று இருக்கிறதா? என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
குழந்தைவேலுவை போல மணமகளின் தந்தை கீழ்வேளூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜனும், கழகத்துக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார். அவரை வாழ்த்துகிறேன்.
மணமக்கள் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்

0 comments: