Friday, November 21, 2014

On Friday, November 21, 2014 by Unknown in ,    
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய–மாநில அரசு தலையிட வேண்டும்மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய ஊர்களில் தை பொங்கல் திருநாளை யொட்டி பல நூறு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு பாரம்பரிய வழக்கப்படி தொன்றுதொட்டு கடந்த ஆண்டு வரை நடந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக விலங்குகள் நல வாரியத்தின் மூலமாக தொடுக்கப்பட்ட வழக்கின் கீழ் ஜல்லிக்கட்டு காளைகள் சித்ரவதை செய்யப்படுவதாக கூறி நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக இடைக்கால தடை இருந்த போதிலும் சிறப்பு அனுமதி பெற்றே நீதிமன்ற வழிகாட்டுதலின் படி மாநில அரசு தலைமையில் மாவட்ட நிர்வாகத்தின் முன்னிலையில் உரிய பாதுகாப்போடு விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தற்போது ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடைவிதிக்கப்பட்ட காரணத்தினால் தமிழகம் முழுவதும் உள்ள காளை வளர்ப்பவர்களும், மாடுபிடி வீரர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், பார்வையாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழர்களின் வீரத்தையும், கலாச்சாரத்தையும் பாதுகாத்திடும் வகையில் மத்திய–மாநில அரசுகள் இதில் தலையிட்டு ஜல்லிக்கட்டு விழாவிற்கு விதிக்கப்பட்டுள்ள நிரந்தர தடையை தளர்த்தி உரிய பாதுகாப்போடு நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துதரப்பு சார்பிலும் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையொட்டி பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வரும் அலங்காநல்லூரை சேர்ந்த கோவிந்தராஜன் இதுபற்றி கூறியதாவது:–
தமிழர்களின் வீரத்தையும், பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் உலகளவில் வெளிப்படுத்தியது. அலங்காநல்லூரில் கடந்த 400 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழாவாகும். இதற்கு கடந்த சில ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இடைக்கால தடை இருந்தபோதிலும் அரசு வழிகாட்டுதலின்படி உரிய பாதுகாப்போடு உயிரிழப்புகள் இன்றி ஒரு வீர விளையாட்டாகவே நடைபெற்று வருகிறது. மத்திய மாநில அரசுகள் உடனடியாக இதுகுறித்து தலையிட்டு அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு உரிய அனுமதி முன்னதாகவே பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0 comments: