Sunday, November 23, 2014
மதுரை புறநகர் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காளவாசலில் உள்ள தாய் மூகாம்பிகை திருமண மண்டபத்தில் நடைபெற்றது .மாவட்ட அவைத் தலைவர் சாமி தலைமை தாங்கினார் .மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன் ,சின்ன செல்லம் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர் .கூட்டத்தில் புறநகர் மாவட்ட புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சரவணன் தனது சிறப்புரையில் ,மாநில மருத்துவர் அணி துணை செயலாளராக இருந்த என்னை புறநகர் மாவட்ட பொறுப்பாளராக நியமித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விற்கு தமது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் ,அதற்கேற்றார் போல தன்னை தயார் படுத்திக் கொண்டு நிர்வாகிகளை ஒருங்கிணைத்து செயல்படுவதோடு புறநகர் மாவட்டம் முழுவதும் கழக கொடி ஏற்றி வைத்து செயல்படக்கூடிய மாவட்டமாக மதுரை புறநகர் மாவட்டம் தமிழகத்தின் முதன்மையாக தெரிகிற வகையில் நிர்வாகிகளின் உழைப்பு இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார் .முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திட மாபெரும் போராட்ட களம் கண்ட வைகோவிற்கு டிசம்பர் 5 ம் தேதி உசிலம்பட்டியில் நடைபெறுகிற பாராட்டு விழாவில் பெருந்திரளாக தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
*26 ம் தேதி தமிழ் ஈழ தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாளினை புறநகர் மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும்
*அமராவதி ஆற்றின் குறுக்கே அணை கட்ட நினைத்திடும் கேரள அரசின் செயலை தடுத்து நிறுத்த வேண்டும்
* டிசம்பர் 4 ல் நடைபெறும் மதுவிற்கு எதிரான போராட்டத்தில் கழக தோழர்கள் சிறப்பாக பங்கேற்க வேண்டும்
*வைகோ விடம் தேதியை பெற்று செயல் வீரரர்கள் கூட்டம் பிரம்மாண்டமாக நடத்திட வேண்டும் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இயற்கை என்றால் நம் நினைவுக்கு வருவது எல்லாம் பசுமையான மரங்கள், வயல்வெளிகள், நீளமான வானமும் தான். ஆனால் இயற்கையின் மற்றொரு உருவான மலைகளும...
-
மணப்பாறை அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த தெருநாயை மீட்ட தீயணைப்புதுறை. மீட்கச் சென்ற அதிகாரியிடம் பரிவுகாட்டி அமைதியாக நின்ற நா...
-
திருப்பூர்திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தமிழகத்த...
-
.திருப்பூர் கோட்டத்தில் அமைந்துள்ள திருப்பூர் வடக்கு திருப்பூர் தெற்கு பல்லடம் ,ஊத்துக்குளி .மற்றும் அவினாசி வட்டங்களில் உள்ள விவசாயிகள்...
-
க.பரமத்தி அருகே விசுவநாதபுரி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்83 மனுக்கள் பெறப்பட்டது க.பரமத்த...
-
சென்னை: தமிழகத்தில் 21 சுங்கச் சாவடிகளில், 10 முதல், 15 சதவீத கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் மத்திய மற்றும் மாந...
-
திருப்பூர் மாவட்டம் , தளி காவல் நிலைய சரக்கதிட்குபட்ட ஆண்டியூர் பகுதியில் 2009 ம் ஆண்டில் அடிதடி வழக்கில் ராஜம்மாள் [55] என்பவ...
-
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ கோவை வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– எங்...
0 comments:
Post a Comment