Wednesday, November 05, 2014

On Wednesday, November 05, 2014 by Unknown in ,    
அனுமதியில்லாத உரம் விற்பனைக்கு தடை -   கரூர் மாவட்டகலெக்டர் உத்தரவு                                                                                                               கரூர் மாவட்டத்தில், அனுமதியின்றி உரம் விற்பனை செய்ததாக, 27 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 46 மெட்ரிக் டன் உரம் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது' என, கரூர் கலெக்டர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நடப்பாண்டு, வடகிழக்கு பருவமழை தீவிரமாக துவங்கியதால், சம்பவ பருவ நெல் சாகுபடிக்கான நடவுப்பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு தேவைப்படும் ரசாயன உரம் போதுமான அளவில், துவக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார் உரக்கடைகளிலும், இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இரு நிறுவனங்களில், யூரியா உரம் உற்பத்தி இல்லாதததை தொடர்ந்து, தமிழக அரசின் முயற்சியால், கரூர் மாவட்டத்துக்கு தேவையான உரம், பிற நிறுவனங்கள் மூலம் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, உரிய ஒதுக்கீடும் பெறப்பட்டுள்ளது.கரூர் மாவட்ட, சாகுபடி பயிர்களுக்கு தேவையான, யூரியா உரம், நவம்பர் மாதத்தில், 1,800 மெட்ரிக் டன்னாகும். இருப்பினும், பற்றாகுறை ஏற்படாமல் கூடுதலாக, 600 மெட்ரிக் டன் சேர்த்து, 2,400 மெட்ரிக் டன்னுக்கு, தமிழக அரசின் மூலம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வினியோகிக்க வேளாண்மை இணை இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், உர வினியோகத்தை கண்காணிக்கும், சிறப்பு கண்காணிப்பு குழுவினர், 74 தனியார் உரக்கடைகளை ஆய்வு செய்து, ஒன்பது உரமாதிரி எடுக்கப்பட்டது..
தனியார் உரக்கடைகளில் அனுமதி இல்லாத நிறுவனங்களில் இருந்து உரம் பெற்றதை கண்டறிந்து, எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 46 மெட்ரிக் டன் உரம் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், 27 உரக்கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.அனைத்து விவசாயிகளுக்கும், தேவைப்படும் உரங்களை தட்டுபாடு இல்லாமல் வழங்க, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரசீது பெற்றால் மட்டும், தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலும். இது சம்பந்தமான புகார்களை அளிக்க விவசாயிகள், யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம் அல்லது மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0 comments: