Saturday, November 01, 2014

On Saturday, November 01, 2014 by Unknown in ,    

மழை காரணமாக ஜவுளி, கொசுவலை, பஸ்பாடி தொழில்கள் கடும் பாதிப்பு                                                                                             கரூர் பகுதியில் மழை காரணமாக ஜவுளி, கொசுவலை, பஸ் பாடி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

 கரூரில் கைத்தறி, விசைத்தறி, கொசுவலைக் கூடங்கள், பஸ் கூட்டு கட்டும் தொழில்கள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, பக்ரீத் என விடுமுறை நாட்கள் வந்ததால் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. இதனைடுத்து தீபாவளி பண்டிகைக்காக விடுமுறை விடப்பட்டது. தீபாவளி விடுமுறைக்காக தொழிலாளர்கள் வெளியூர் சென்றிருந்தனர். இவர்கள் கடந்த திங்கள் முதல் வேலைக்கு வர ஆரம்பித்தனர். ஆனால் 15 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. நேற்று சற்று மழை குறைந்திருந்தது.

 இதுபோன்ற காரணங்களினால் கரூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மழை, வெள்ளம் காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்யாமல் இருந்தால் வரும் திங்கள் முதல் இந்த நிலைமை சீரடையும் என எதிர்பார்ப்பதாக தொழிலகங்களை நடத்துவோர் தெரிவித்தனர். நாள் ஒன்றுக்கு ஜவுளித் துறை சார்ந்த தொழிலகங்களிலும், கொசுவலைக்கூடங்களிலும் ரூ.ஒன்னரைக்கோடி அளவுக்கு உற்பத்தி செய்யப்படும். இதில் பாதிஅளவுக்குக்கூட உற்பத்தி நடைபெறவில்லை என அவர்கள் தெரிவித்தனர். 

 இதுகுறித்து ஜவுளி, கொசுவலை தொழில் நடத்துவோர் கூறுகையில், ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யவேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டதால் ஆர்ஓ சிஸ்டம் உபகரணங்களை நிறுவி சாயஆலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த முறையில் சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்கு கூடுதல் செலவு ஆகிறது. இம்முறையை பின்பற்றாமல் ஏற்கனவே இயங்கி வந்த 400க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் மூடப்பட்டன. புதிய முறைப்படி குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் ஆர்ஓ சிஸ்டம் முறையில் ஆலைகள் இயங்குகின்றன,. இப்பிரச்னையால் தடுமாறும் ஜவுளித்தொழில் உற்பத்தி இழப்பு காரணமாக மேலும் தடுமாற்றத்திற்கு ஆளாகி உள்ளது.

 இதேபோன்று கொசுவலை நூல் துணியை உற்பத்தி செய்யும் மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு பிரச்னை காரணமாக உற்பத்தி குறைந்து வரும் நிலையில் தற்போதைய பிரச்னைகளால் கொசுவலை உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். 
 வெளிநாடுகளில் ஆர்டர்களை பெறும்போது ஏற்றுமதி ஆர்டர்களுக்கான அட்வான்ஸ்தான் அன்றைய தேதியில் ஜவுளி வாங்குவோரால் இறுதி செய்யப்படுகிறது. ஆனால் ஏற்றுமதி ஆர்டர் பெறுவதை மையமாக வைத்துத்தான் ஜவுளி ஏற்றுமதி கணக்கிடப்படுகிறது. வெளிநாட்டு ஏற்றுமதி ஜவுளி உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களை பயன்படுத்த வேண்டியதிருக்கிறது. கொட்டேஷன் கொடுத்து சில மாதங்களுக்கு பிறகு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிந்தால் அன்றைய நிலவரப்படி அதிகவிலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தி விலை அதிகமாகிறது  இதுபோன்று பல பிரச்னைகளை ஏற்றுமதியாளர்கள் சந்தித்து வருகின்றனர்.

0 comments: