Wednesday, December 03, 2014

On Wednesday, December 03, 2014 by farook press in ,    
ஒரே நேரத்தில் 3 மொழிகளில் ரெயில்களின் பெயர், நேரம் அடங்கிய டிஜிட்டல் தகவல் பலகை எழும்பூர் ரெயில் நிலையத்தில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது
ரெயில்கள் வரும் நேரம், எந்த நடைமேடையில் வரும், ரெயில்களின் பெயர்கள் ஆகியவற்றை பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களிலும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
தற்போது சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு ரெயில்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வசதியாக கூடுதலாக டிஜிட்டல் முறையில் தகவல்கள் பலகைகள் வைக்கப்பட உள்ளன.இதுகுறித்து சென்னை எழும்பூர் ரெயில் நிலைய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவதுசென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்களின் பெயர், வரும் நேரம் ஆகியவை அடங்கிய டிஜிட்டல் தகவல் பலகை 15 அடி அகலம், 10 அடி நீளம் அளவில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வைக்கப்பட்டது. இது பயணிகளின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதைத்தொடர்ந்து தற்போது சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேலும் 6 இடங்களில் டிஜிட்டல் தகவல் பலகை வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரெயில் நிலையத்தில் கார் மற்றும் ஆட்டோக்களில் வந்து இறங்குபவர்கள் பார்ப்பதற்கு ஏதுவாகவும், ரெயில் நிலையத்துக்கு நேர் எதிரே உள்ள சாலையில் இருந்தபடியே பார்ப்பதற்கு ஏதுவாகவும் 30 அடி நீளம், 10 அடி அகலத்தில் டிஜிட்டல் தகவல் பலகை வைக்கப்பட உள்ளது.இந்த டிஜிட்டல் தகவல் பலகையில் 8 ரெயில்களின் பெயர்கள், ரெயில்கள் வரும் நேரம், புறப்படும் நேரம், எந்தெந்த நடைமேடையில் நிற்கும் போன்ற தகவல்களை பதிவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் முக்கியமானது என்னவென்றால் தெற்கு ரெயில்வேயிலேயே முதன் முறையாக 3 மொழிகளும் (தமிழ், ஆங்கிலம், இந்தி) ஒரே நேரத்தில் இந்த டிஜிட்டல் தகவல் பலகையில் ஒளிப்பரப்படுகிறது.ஏற்கனவே எழும்பூர் ரெயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் தகவல் பலகை 3 மொழிகளும் மாறி மாறி வரும்படி, அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது அதற்கான பணிகள் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளது. இந்த மாதம் (டிசம்பர்) தொடக்கத்தில் ஒளிபரப்ப இருக்கிறோம். மேலும் 5 டிஜிட்டல் தகவல் பலகைகளில் ஒன்று எழும்பூர் ரெயில் நிலைய நுழைவுவாயில் அருகிலும் (5 ரெயில்களின் பெயர்கள் இடம்பெறும்), 2 தகவல்பலகைகள் பயணிகள் நடந்து செல்லும் மேம்பாலத்திலும், அடுத்த 2 தகவல் பலகைகள் பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் இருந்து எழும்பூர் ரெயில் நிலையம் வரும் பகுதியில் வைக்கப்பட உள்ளது. மேற்கூறப்பட்ட 4 டிஜிட்டல் தகவல் பலகைகளில் 2 ரெயில் களின் பெயர்கள் இடம்பெறும் அளவுக்கு வைக்கப்படும்.

0 comments: