Thursday, December 04, 2014

On Thursday, December 04, 2014 by farook press in ,    
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஒரே நாளில், கோர்ட்டுகளில் ‘‘மெகா லோக் அதாலத்’’ எனப்படும் மாபெரும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. கோர்ட்டுகளில் நிலுவையில் இருந்த லட்சக்கணக்கான வழக்குகளுக்கு அப்போது தீர்வு காணப்பட்டது. நடப்பாண்டில் வருகிற 6–ந் தேதி(சனிக்கிழமை) நாடு முழுவதும் மாபெரும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்படவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் கடந்த ஆண்டு மக்கள் நீதிமன்றம் மூலம் 13 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், தொலைத்தொடர்பு துறை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து மற்றும் நஷ்ட ஈடு வழக்குகள், கொலை, கொள்ளை பாலியல் பலாத்காரம் அல்லாத குற்ற வழக்குகளுக்கு இந்த நிகழ்ச்சியில் தீர்வு காணப்பட உள்ளன. இதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டு நீதிபதிகள், மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை, வங்கி அலுவலர்கள், காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகள், வக்கீல்கள் ஆகியோருடன் மாவட்ட நீதித்துறை நிர்வாகம் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் போது, வருகிற 6–ந் தேதி திருப்பூர் மாவட்டத்தில் நடக்க உள்ள மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காண்பதற்கு உரிய வழக்குகளை தயார்படுத்தவும், இந்த ஆண்டு 15 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

0 comments: