Thursday, December 04, 2014

On Thursday, December 04, 2014 by farook press in ,    
9–ம் வகுப்பு மாணவி
திருப்பூர் மாவட்ட ஊத்துக்குளி கரைப்பாளையம் புதுக்காலனியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவியும், அதே பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி அவினாசியில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இதை தொடர்ந்து இருவரின் வீட்டாரும் காதலர் ஜோடிகளை அழைத்து சென்று திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்தனர். இதன்படி நேற்று காலை கருவலூரில் உள்ள அம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைப்பதாக தகவல் கிடைத்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர். இந்த நிலையில் 14 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தப்படும் தகவல் ஊத்துக்குளி தாசில்தார் வாணிலட்சுமி ஜெகதாம்பாளுக்கு கிடைத்தது. தகவலின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி வின்சென்ட் தியாகராஜன் மற்றும் ஊத்துக்குளி போலீசார் மணமகளின் வீட்டுக்கு சென்றனர்.
திருமணம் தடுத்து நிறுத்தம்
மணமகளுக்கு 18 வயது நிரம்பாத நிலையில் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே இந்த திருமணத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். 18 வயது நிரம்பிய பின்னர் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்றும் இருவீட்டாரிடமும் அதிகாரிகள் அறிவுரை கூறினார்கள். மாணவியும் தான் தொடர்ந்து படிப்பதை விரும்பவதாக தெரிவித்ததை தொடர்ந்து திருமணம் உடனடியாக நிறுத்தப்பட்டது.
திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் இருவீட்டாரிடமும் எழுதி வாங்கி கொண்டு சென்றனர். அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

0 comments: