Thursday, December 04, 2014
திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 285 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது என்று மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசினார்.
மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் மாதம் 3–ந்தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருந்தொழுவு ஊராட்சி கரட்டுப்புதூர் அன்னாள் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. அங்குள்ள மாணவ–மாணவிகளுக்கு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
விழாவில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசியதாவது:–
தமிழக முதல்–அமைச்சரின் சட்டப்பேரவை விதி எண்.110–ன் கீழ் 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கான விடுதியுடன் கூடிய தொழில் பயிற்சி மையத்தை நமது மாவட்டத்தில் அன்னாள் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 285 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் நடப்பு ஆண்டில் மொத்தம் ரூ.2 கோடியே ஆயிரம் மதிப்பில் 1,733 பேருக்கு மாதம் ரூ.1000 வீதம் பராமரிப்பு தொகையும், ரூ.8 லட்சம் மதிப்பில் 265 பேருக்கு கல்வி உதவித்தொகையும், ரூ.2 லட்சம் மதிப்பில் 20 பேருக்கு வங்கிக்கடன் மானியமும் வழங்கப்பட்டு உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களான நவீன செயற்கை கால் மற்றும் செயற்கை கை, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, காதொலி கருவி, காதுக்கு பின் பொருத்தும் நவீன காதொலி கருவி, ஊன்றுகோல், காலிபர் ஆகியவையும், பார்வையற்றவர்களுக்கு ஒளிரும் ஊன்றுகோல், கருப்புக்கண்ணாடி, பேசும் கைக்கடிகாரம், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உறுப்பெருக்கி மற்றும் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசினார்.
விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், பொங்கலூர் ஒன்றிய பெருந்தலைவர் சிவாச்சலம், ஜெய்ஸ்ரீராம் கல்வி நிறுவனர் தங்கராஜ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி தலைவர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...

0 comments:
Post a Comment