Tuesday, December 09, 2014

On Tuesday, December 09, 2014 by Unknown in ,    
லிங்கா பட வழக்கு: ரஜினிகாந்துக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீசுநடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘‘லிங்கா’’ படத்துக்கு தடை கேட்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதை விசாரித்த நீதிபதி வழக்கை ஏற்கனவே தள்ளுபடி செய்து உத்தர விட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ரவிரத்தினம், வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், ரமேஷ் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் அப்பீல் மனு செய்திருந்தனர். அதில், ரஜினிகாந்த், இயக்குனர் ரவிக்குமார் ஆகியோர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் முரண்பாடுகள் உள்ளது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதிகள் தனபாலன், வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு நடிகர் ரஜினிகாந்த், பட தயாரிப்பாளர் வெங்கடேஷ், இயக்குனர் ரவிக்குமார் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் வழக்கை வருகிற 10–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்

0 comments: