Tuesday, December 09, 2014

On Tuesday, December 09, 2014 by Unknown in ,    
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் நாயர். இவரது மனைவி கனகாம்பாள் (வயது 51). 20 வருடங்களுக்கு முன்பு மேலூர் அருகே உள்ள திருவாதவூருக்கு குடிவந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஒரு தனியார் டாக்டரிடம், கனகாம்பாள் கம்பவுண்டராக 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்ததாக தெரிகிறது.
இந்த அனுபவத்தை வைத்து அவர், திருவாதவூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் கிளினிக் வைத்து நடத்தி வந்தார். இதுகுறித்து மேலூர் போலீஸ் டி.எஸ்.பி. மங்களேஸ்வரனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மேலூர் தனிப்படை சப்–இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், கலாசேகர் ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது கனகாம்பாள், போலி டாக்டர் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கனகாம்பாள், சிகிச்சை அளித்து வந்துள்ளதாக தெரிகிறது.

0 comments: