Sunday, December 14, 2014

On Sunday, December 14, 2014 by farook press in ,    
ஏழைகளின் அரசு என்று சொல்லிக் கொண்டு தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு பால் கட்டண உயர்வைத் தொடர்ந்து மின்சாரக் கட்டண உயர்வையும் சுமத்தி இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளியன்று மின் கட்டணம் 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அன்று மாலையே திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகரக்குழு உறுப்பினர் இ.பி.ஜெயகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் மின் கட்டணம் 15 சதவிகிதத்தை உயர்த்தியிருப்பதற்கு தமிழக அரசிற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மின் கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன், மாநகரக்குழுச் செயலாளர் பி.முருகேசன், மாநகரக்குழு உறுப்பினர் பி.ஆர்.கணேசன் ஆகியோர் உரையாற்றினர்.
ஏழைகளின் அரசு என்று சொல்லிக் கொள்ளும் அதிமுக அரசு அடுத்தடுத்து மக்களின் அடிப்படை தேவைகளின் மீது சுமைகளைச் சுமத்தி வருகிறது. பால் கட்டணத்தை உயர்த்தியது, தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. அதேபோல் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசும் மக்கள் விரோத கொள்கைகளை திணித்து வருகிறது. எனவே இரு அரசுகளின் மக்களுக்கு எதிரான கொள்கைகளை தடுத்து நிறுத்த சாமானிய மக்கள் இடதுசாரிகளின் பின்னால் அணிதிரள வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் வலியுறுத்தினர். இதில் மாநகரக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

0 comments: