Monday, December 22, 2014

On Monday, December 22, 2014 by Unknown in ,    


                                                                                                                                                                   
உடுமலையில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலத்தின் இறுதிக் கட்டப் பணிகளை சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
உடுமலை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக கடந்த 2009-ஆம் ஆண்டு ரூ.18 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டன.
கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்தப் பணியில் கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம் காரணமாக மேலும் கூடுதலாக ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.இதையடுத்து, கடந்த சில மாதங்களாக மேம்பால கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறன்றன.
தற்போது 90 சதவீதம் நிறைவடைந்துள்ள இப்பணிகளை சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் சனிக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை உடனடியாக முடிக்குமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரி களிடம் அவர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது அதிமுக நகரச் செயலாளர் கேஜி.சண்முகம், நகர்மன்ற துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், நகர்மன்ற உறுப்பினர் டி.கண்ணன், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

0 comments: