Saturday, December 06, 2014
மதுரை மாவட்டம், மேலூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் குவாரி முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம்
அரசுக்கு ரூ.16 ஆயிரத்து 388 கோடி இழப்பு ஏற்பட்டதாக, 2011-ம் ஆண்டு கலெக்டராக இருந்த சகாயம் அரசுக்கு அறிக்கை
அனுப்பினார்.
அவருக்குப்பின் கலெக்டராக பொறுப்பேற்ற அன்சுல் மிஸ்ரா இது குறித்து தீவிர ஆய்வு நடத்தினார். அப்போது பி.ஆர்.பி., உள்ளிட்ட 86 கிரானைட் குவாரிகளில் முறைகேடாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு மேலூர் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த நிலையில் கிரானைட் முறைகேடுகள் குறித்த பொதுநல வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கடந்த 3-ந்தேதி மதுரை வந்து விசாரணை தொடங்கினார். அவர் விசாரணை நடத்துவதற்காக, மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பூமாலை வணிக வளாகத்தில் தனி அலுவலகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் தங்குவதற்கு அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. நேற்று 3-வது நாளாக அவர் பூமாலை வணிக வளாகத்தில் விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில், அவரது விசாரணைக்குழு அலுவலர்களில் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது. அதில், “உங்கள் குழு கண்காணிக்கப்படுகிறது. உங்களுக்கு ஆபத்து உள்ளது. விசாரணை அதிகாரியின் தங்கும் அறை, அலுவலகம் ஆகியவற்றில் ஒட்டுக்கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து, சகாயம் தங்கும் சுற்றுலா மாளிகை அறை, பூமாலை வணிக வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகம் ஆகியவற்றில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஒட்டுக்கேட்பு கருவி எதுவும் பொருத்தப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. எனினும், சுற்றுலா மாளிகையில் அவர் தங்கியிருந்த அறைக்கு பதில் வேறு அறை ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. அத்துடன் அவரது பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
0 comments:
Post a Comment