Friday, January 23, 2015

On Friday, January 23, 2015 by Unknown in ,    
கடந்த 15 ஆண்டுகளாக வசூல் செய்யப்பட்ட மதுரை ரிங்ரோடு வாகன சுங்க வரி கட்டண வசூல் திடீர் நிறுத்தம்
மதுரை சுற்றுச்சாலையில் (ரிங்ரோடு) சுங்கக்கட்டணம் வசூலிப்பது சம்பந்தமாக மதுரை, விருதுநகர் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது மாநகராட்சி வக்கீலை பார்த்து நீதிபதிகள் கூறியதாவது:–
சுற்றுச்சாலை அமைப்பதற்காக எவ்வளவு கடன் வாங்கப்பட்டுள்ளது, அதில் கடந்த 15 ஆண்டுகளாக எவ்வளவு கடன் தொகை திரும்ப செலுத்தப்பட்டுள்ளது, இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு சுங்கக்கட்டணம் வசூலித்தால் கடன் தொகையை திரும்ப செலுத்த முடியும் என்பது போன்ற அனைத்து விவரங்களையும் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முன்பு பொதுமக்களுக்கு தெரியும் வகையில் அறிவிப்பாக வெளியிட வேண்டும் என்றும், கடன் தொகையை செலுத்தி முடிக்காதபட்சத்தில் 1.11.2014 முதல் 31.10.2015 வரை வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சுங்கக்கட்டணம் எவ்வளவு என்பதையும் அறிவிப்பாக 6 வாரத்தில் வெளியிட வேண்டும் என்று 5.11.2014 அன்று தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ஏன் செயல்படுத்தவில்லை.
இவ்வாறு நீதிபதிகள் கேட்டனர்.
இதன்பின்பு, இதுசம்பந்தமாக மதுரை மாநகராட்சி ஆணையாளர் அடுத்த மாதம்(பிப்ரவரி) 4–ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்தநிலையில் மதுரை மாநகராட்சி கமிஷனர் கதிரவன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:–
சென்னை ஐகோர்ட்டு, மதுரை கிளை உத்தரவின்படி மதுரை மாநகராட்சி உள்வட்ட சுற்றுச்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் மூலம் வசூல் செய்யப்பட்ட சுங்கவரிகள் இன்று (நேற்று, 22ந் தேதி) முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. அரசிடம் இருந்து உரிய ஆணை பெற்று சுங்க கட்டணம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த திடீர் உத்தர

0 comments: