Friday, January 23, 2015

On Friday, January 23, 2015 by Unknown in ,    
ரேசன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அவ்வப்போது திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெங்கடேசன் தலைமையில் மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு ரேசன் கடைகளில் பறக்கும் படையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஒரு சில ரேசன் கடைகளில் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி உள்ளிட்ட குடிமைப் பொருட்களை முறையாக விநியோகம் செய்யாமல் இருப்பதும், பொருட்களை போலி ரசீது மூலம் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் சில கடைகளில் விற்பனைத் தொகையை கருவூலத்திற்கு செலுத்தாமலும், இருப்புத் தொகையில் குறைவு ஏற்படுத்தி இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
இதுபோன்ற முறைகேடுகளில் தேங்கல்பட்டி, மதிப்பனூர், மேலப்பொன்னகரம், பெத்தானியாபுரம்–1, பொன்னிநகர்–1 ஆகிய 5 கடைகளின் விற்பனையாளர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து 5 கடைகளின் விற்பனையாளர்களையும் உடனடியாக பணிஇடை நீக்கம் செய்து கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் உத்தரவிட்டார். முறைகேடுகளில் ஈடுபட்ட விற்பனையாளர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 652 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் வெங்கடேசன் கூறும்போது இது போன்ற திடீர் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு முறைகேடுகளில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

0 comments: