Friday, January 23, 2015

On Friday, January 23, 2015 by Unknown in ,    
imggalleryமதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவராக இருந்த கே.ராஜபாண்டியன் கடந்த 2013–ம் ஆண்டு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை அ.தி.மு.க. வில் இருந்து கட்சி தலைமை நீக்கி உத்தரவிட்டது.
கிழக்கு மண்டல தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனால் கிழக்கு மண்டல தலைவர் பதவி காலியானதால் உதவி கமிஷனர் கட்டுப்பாட்டில் கிழக்கு மண்டல நிர்வாகம் செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் கிழக்கு மண்டல தலைவர் தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக 70–வது வார்டு கவுன்சிலர் சண்முகவள்ளியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இன்று காலை மதுரை மாநகராட்சி கூட்ட அரங்கில் தேர்தல் நடந்தது. காலை 9 மணியளவில் அ.தி.மு.க.வை சேர்ந்த சண்முகவள்ளி மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அலுவலருமான கதிரவனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் காலை 10.30 மணிக்கு சண்முகவள்ளி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கமிஷனர் கதிரவன், சண்முகவள்ளியிடம் வழங்கினார்.
கிழக்கு மண்டல புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட சண்முகவள்ளிக்கு மேயர் ராஜன் செல்லப்பா, துணை மேயர் திரவியம் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மண்டல தலைவர்கள் சாலைமுத்து, ராஜபாண்டியன், நிலைக்குழு தலைவர்கள் முத்துகருப்பன், ஜெயபால், சுகந்தி அசோக், கண்ணகி பாஸ்கர், கவுன்சிலர்கள் குமார், காசிராமன், முருகேசன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மாரிச்சாமி, வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் உள்பட பலர் சண்முகவள்ளிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
புதிய கிழக்கு மண்டல தலைவர் சண்முகவள்ளி கூறுகையில், மக்களின் முதல்வர் அம்மா கொடுத்த இந்த பதவி மூலம் அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றுவேன். கிழக்கு மண்டலத்துக்குபட்ட அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சி திட்ட பணிகளையும், பொதுமக்களின் அடிப்படை வசதிகளையும் விரைந்து முடிக்க முயற்சி மேற்கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: