Saturday, January 24, 2015

On Saturday, January 24, 2015 by Unknown in ,    
மதுரை கரிமேடு அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப் ராஜ். இவரது மனைவி ஜெயசீலி (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த கடன் தொடர்பாக கடன் கொடுத்தவருக்கும் ஜெயசீலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த ஜெயசீலி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டார்.
இது குறித்து ஜோசப் ராஜ் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணைக்காக ஜெயசீலியை கரிமேடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர்.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை திடீர் என ஜெயசீலி குடித்தார். சிறிது நேரத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார்.
இதனால் அங்கிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து ஜெயசீலியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெயசீலிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

0 comments: